எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளியில் அன்பு அலமாரி...

Sunday, March 4, 2018





மரியாதைக்குரிய  ரோகிணி கலெக்டரின் *அன்புச்சுவர்* மாதிரி,பள்ளியிலையும் ஆரம்பிக்கனுனு ரொம்ப நாள நினைச்ச விஷயம் நம்ம பள்ளிகுளத்து J.R.C பசங்க மூலமா இன்னிக்கி, மனசுக்கு நிறைவா தொடங்கியாச்சி.

கொஞ்சம் பெயர மட்டும் மாத்தி *அன்பு அலமாரினு* வெச்சிகிட்டோம்.. *இருப்போரிடமிருந்து பெற்று இல்லாதோர்க்கு வழங்குவது* தா திட்டம்.
நம்ம பசங்க , ஆசிரியருங்க, நண்பர்கனு, இவுங்ககிட்ட இருந்து வாங்கன,(பயன்படுத்தி ஒதுக்கி வெச்சியிருக்கிற, மத்தவங்க பயன்படுத்த கூடிய நிலையில உள்ள) பொருட்களே 3 மூட்ட ஆயிடிச்சி.

அத எங்க பள்ளிகுளத்துல  வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கிற குடும்பங்களுக்கும்,ஆதரவற்ற பெரியவர்களுக்கு மட்டுமில்லாது பக்கத்து கிராமமான இந்திரசன் குப்பத்துல இருக்கிற 10 பழங்குடி இன குடும்பத்துக்கும்,  புடவை, வேஷ்டி, சட்டை, டீ-சட்டை, குழந்தைகளுக்கான ஆடைகள்னு அவுங்கவுங்களுக்கு வேண்டியத, நம்ம JRC பசங்க, குடுத்து நம்மளையே கலங்க வெச்சிட்டாங்க.

எத்தனையோ திட்டம் பள்ளியில, செயல்படுத்தினாலும், இந்த திட்டம் என்னமோ எல்லோருக்குமே மனசுக்கு ஒரு இனம் புரியாத  நிம்மதிய தரமாதிரி ஒரு உணர்வு.....

உங்ககிட்டேயும், மத்தவங்க பயன்படுத்துர மாதிரி பொருட்கள் மீதி இருக்கா... பக்கத்துல இருக்கிற இல்லதாவங்களுக்கு கொடுத்து பாருங்க, எவ்ளோ சந்தோசமா இருக்குனு...
முடியலையா எங்க பள்ளிக்கு அனுப்பி வெய்யுங்க, ஒவ்வொரு வாரமும் பக்கத்துல இருக்கிற எதுனா ஒரு கிராமத்துக்கு போய்ட்டு அங்கிருக்கிற பழங்குடியினருக்கும், இல்லாதவங்களுக்கும் கொடுக்கலானு திட்டம்..... முடிஞ்சா அனுப்புங்களேன்..

மரித்துப்போன மனிதத்தை மீட்டெடுப்போம்...

ஈதல் இன்பம்.....

JRC
ஊ.ஒ.ந.நி.பள்ளி
பள்ளிகுளம் & அஞ்சல்,
மேல்ஒலக்கூர் வழி,
செஞ்சி (T.K)604203
விழுப்புரம் மாவட்டம்.

1 comment

  1. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One