எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு விழா

Monday, March 5, 2018









ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு மற்றும் விளையாட்டு விழா மதுரை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைமையாசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். அலங்காநல்லூர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின் கொடி ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். பச்சகுதிர, பாண்டி ஆட்டம், பல்லாங்குழி, பரமபதம், சொட்டாங்கல், கோலி குண்டு, பம்பரம், கண்ணாமூச்சு, கேரம், சிலம்பம், தப்பாட்டம், தாயம், கோ கோ, கபடி என பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. பள்ளி மேலாண்மை குழு தலைவர் முருகேஸ்வரி உட்பட ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பூலாம்பட்டி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தலைமையாசிரியை சார்லட் தலைமையில் பாரம்பரிய விளையாட்டுகளை பார்வையிட்டனர். தலைமையாசிரியர் தென்னவன் கூறுகையில் ' இன்றைய குழந்தைகள் விளையாட்டு என்றால் வீடியோ கேம்ஸ் செல்போனில் கேம்ஸ் முதலிய விளையாட்டுகளையே விளையாடுகின்றனர். இந்த விளையாட்டுகளால் கோபம், வன்மம், சுயநலம், தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமின்மை முதலியன ஏற்படுகின்றன. ஆனால் நமது பாரம்பரிய விளையாட்டுகள் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதோடு நினைவாற்றல், சிந்தனைத் திறன், விட்டு கொடுத்தல், வெற்றி தோல்விகளை சமமாக எண்ணுதல், தன்னம்பிக்கை முதலியன வளர்கின்றன. மேலும் பல்லாங்குழி விளையாடுவது கணித அடிப்படைத் திறன்களை வளர்க்கிறது. நமது பாரம்பரிய விளையாட்டுகள் ஒவ்வொன்றிலும் பாடப் பொருளும் நேர்மறை எண்ணங்களும் புதைந்து கிடக்கின்றன. அதனை வெளிக் கொணரும் விதமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாரம்பரிய விளையாட்டுகளை நடத்துகிறோம் என்றார். மாணவி புவனேஸ்வரி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One