குழந்தைகள் வீட்டுப்பாடங்களை எழுதிக் கிழிக்கலாம்...ஆனால்
வீட்டுப்பாடங்களை எழுதியே குழந்தைகள் கிழிந்துவிடக்கூடாது..
இது
நேற்று திருச்சியில் பிரதான சாலையில் நான் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பொழுது நடந்த சம்பவம்.
எனது வாகனம் ஒரு சிக்னல் நிறுத்தத்தில் நின்றபொழுது ஒரு ஆட்டோ அருகில் வந்து நின்றது..
எதார்த்தமாக பார்த்தால் தூக்கிவாரிப்போட்டது. ஒரு குழந்தை ஆட்டோவில் இருந்தபடி வீட்டுப்பாடம் செய்து கொண்டு இருந்தது. கண்ணாடிக் கதவை இறக்கிவிட்டு, என்னம்மா Home work அதிகம் தருகிறார்களா? எனக் கேட்டேன். அக்குழந்தை சிரித்தபடியே தலையாட்டியது. ஆட்டோ புறப்பட்டது..
ஆனாலும் குழந்தை எழுதிக்கொண்டே சென்றது. குழந்தைகளின் உலகம் மிக மென்மையானது.
கல்வி என்ற பெயரில் குழந்தைகளைக் கசக்கி கிழித்துவிடாதீர்கள்...
சி.சதிஷ்குமார்
கல்வியாளர்கள் சங்கமம்
உண்மை
ReplyDeleteஆனால் தற்போதைய காலத்து பிள்ளைகளுக்கு TV பார்க்கத்தான் நேரம் உள்ளது படிக்க நேரம் இல்லை