எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Phoetic English Video-விழுப்புரம் மாவட்டத்து அனைத்து ஒன்றியங்களிலும் கண்ணன் சார், ஐயப்பன் சார், ஜெரோம் சார் இணைந்து கொடுத்த training மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது

Saturday, March 24, 2018


தல போல வருமா
-----------------------------

DPI -ல் Trial Shooting நடத்தும் போது Flex backdrop  இருந்தா நல்லாயிருக்குமே என்ற என் குரலுக்கு, இந்தா ரெடி பண்ணிறேன் சார் என்றது ஒரு குரல் என்னை யாரென்று தெரியாத அந்த நாளிலும்...

DPI யின் ETV studio வில் நாம் நினைத்த படி பக்காவாக சூழல் அமையாது என்ற என் கருத்துக்கு "எங்க ஏரியாவில இடம் நாங்க ரெடி பண்ணிக் கொடுக்கிறோம் சார், நீங்க அங்க வந்துருங்க" என்று தீர்க்கமாக ஒலித்தது அதே குரல்...

யாரென்று ஆழ்ந்து பார்த்தேன்,அது ஆசிரியர் கண்ணன்...

சிரித்த முகம்...எதைச் சொன்னாலும் செய்வதாக உத்தரவாதம்...ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற தீரா தாகம் அவரிடத்தில் காண முடிந்தது.

அடுத்தடுத்து அடுக்கடுக்காய் அவர் செய்து முடித்த காரியங்கள்.... நினைத்தால் மலைப்பாய் இருக்கிறது...

அனைத்து ஆசிரியர்களோடும் இணைந்து இடத்தேர்வு,ஓவியப்பணி,
ஒளிவிளக்கு கம்பி அடித்தல்,மின்சாரம், ஜெனரேட்டர்,ஏ சி எனப் பல வேலைகளுக்காய் தன் வீட்டைக் கூட மறந்து தவமாய் தன்னை ஈந்தார்...

ஜாலியாக சுற்றி எதற்கும் கவலைப்படாத இவர் phonetic வகுப்பு எடுக்க தன்னையே முழுவதும் மாற்றிக் கொண்டார்.எல்லாரும் இவரைப் பார்த்து முதலில் சிரித்தோம்.ஆனால் முயற்சியும்,பயிற்சியும் கைக்கொண்டு போகப் போக,ஆகப்பெரும் phonetic trainer ஆக தன்னையே உருவாக்கினார்,உரு மாறினார்.

விழுப்புரம் மாவட்டத்து அனைத்து ஒன்றியங்களிலும் கண்ணன் சார், ஐயப்பன் சார், ஜெரோம் சார் இணைந்து கொடுத்த training மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது என்றால் மிகையாகாது.

வீடு,குடும்பத்தை விட முக்கியமாக, DVD வெளியாகி ,அதன் பலனும்,பயனும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குப் போக வேண்டும் என்கிற ஆவல் அல்ல வெறி என்றே சொல்லுமளவுக்கு இன்று வரை அவரது குரல் இன்னும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இதைச் செய்தால் எனக்கு என்ன பிரயோஜனம் கிடைக்கும் என்று கணக்குப் போடாத வெள்ளந்தி மனிதர் இவர்.எவ்வளவு அடித்தாலும் தாங்கும் எளிமை மாறா சிரிப்புக்கு சொந்தக்காரர். வயதில் மூத்தவர் என்றாலும் Director sir என்ற சொல்லுக்கு மறு சொல் உதிர்க்காதவர்.இவரால் தான் shooting spot எப்போதும் கலகலவென இருக்கும்.

ஆடல்,பாடல்,நரிக்குறவர் மிமிக்ரி என்று கலகலப்பாக்கி யாரையும் சோர்வுறச் செய்யா நேச நெசவுக்காரர் இவர்.

எங்க ஸ்கூலுக்கு phonetic training கொடுக்க எப்ப வர்றீங்கன்னு இப்பக்கூட கேட்டுப் பாருங்க.எப்ப வரன்னு தான் பதில் வரும்.

இப்படிப்பட்ட ஆசிரியருக்கு வேறு எதுவுமே பிரதி உபகாரம் செய்யத் தேவையில்லை.

சமூக ஊடகங்களில் ஒரு வாழ்த்து,ஒரு like & Share...
அவ்வளவு தான்...
அவரின் நல்ல மனம் குளிரட்டும்...
நன்றி மறப்பது நன்றன்று.

அமலன் ஜெரோம்
படப்பதிவு இயக்குநர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One