எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Monday, April 30, 2018


பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம் தோறும் முதன்மைகல்வி அலுவலர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு பள்ளிகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த அடிப்படையில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத அரசு, தனியார், மழலையர் பள்ளி, சி.பி.எஸ்.இ. , ஐ.சி.எஸ்.இ. பள்ளியிலும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கும் சொந்த நிலம், போதுமான ஆசிரியர்கள், தீத்தடுப்பு சாதனங்கள் போன்றவை இருக்க வேண்டும். இவற்றை பின்பற்றாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலன் கருதி 10-ம் மற்றும் 12-ம் பொதுத்தேர்வு முடிவடைந்தவுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாதத்தில் பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

நாளை மறுநாள் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


* 9 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டமும் கணினிமயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

வரி சலுகை பற்றி அறியாத ஊழியர்கள்!

Proposal merge language papers for classes 11th , 12th under study


Govt teachers oppose move to close schools having poor enrolment


சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் தமிழ்நாடு 50 சதவிகிதம் சரிவு


தொடக்கக்கல்வித்துறை தனித்து இயங்க ஆசிரியர்கள் கோரிக்கை


பொதுமக்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் பரவும் பணி நியமனம் குறித்த தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களை வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
சென்னையில் உள்ள வருமான வரித்துறையில் பல்வேறு பதவிகளுக்கு இணையதளத்தின் வழியாக பணி நியமன விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம் என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், இத்தகைய பணி நியமன நடைமுறை எதையும் மேற்கொள்ளவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், வருமான வரித்துறையின் அரசிதழ் பதிவு பெறாத பல்வேறு பதவிகளுக்கான பணி நியமனம் இத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் குறிப்பிட்ட நடைமுறையின்படி பணியார் தேர்வாணையத்தால் மட்டுமே செயல்படுத்தப்படும். எனவே, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்திகளைப் பார்த்து ஏமாற வேண்டாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

TET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தரவரிசை பட்டியல் மற்றும் காலி பணி இடங்களை விரைந்து நிரப்ப கோரிக்கை மனு அளித்தனர்.


Maths Mobile app for teaching


Photomath-maths mobile app for teaching and learning maths

Simply point your camera toward a math problem and Photomath will magically show the result with a detailed step-by-step instructions.

Photomath provides:
∙ Camera calculator
∙ Handwriting recognition
∙ Step-by-step instructions
∙ Smart calculator
∙ Graphs (NEW)
Photomath supports arithmetics, integers, fractions, decimal numbers, roots, algebraic expressions, linear equations/inequalities, quadratic equations/inequalities, absolute equations/inequalities, systems of equations, logarithms, trigonometry, exponential and logarithmic functions, derivatives and integrals.

Click the below link to download

Photomath-maths mobile app for teaching and learning maths

Video

இணையத்தில் பள்ளிகள் ஒருங்கிணைப்பு ; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

''ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்களை நடத்த, அனைத்து அரசு பள்ளிகளும் இணையதளம் வாயிலாக இணைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில், பொறியியல் கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கான 'ஆன்-லைன்' விண்ணப்ப முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை, 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று நடந்தது.விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: இந்திய அளவில், உயர்கல்வித்துறையில் வளர்ச்சி, 23 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற இலக்கு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் தான், 44.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுஉள்ளது.பொறியியல் கல்லுாரிகளில், ஆன்லைனில், வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அரசு பாடத்திட்டம், ஒரு வரலாறு படைக்கும் பாடத்திட்டமாக அமைய உள்ளது. ஆறு, ஒன்பது, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், அத்தனை பேருக்கும் சி.பி.எஸ்.இ., பாடத்தை மிஞ்சும் வகையில், புதிய திட்டம் இருக்கும்.

இந்த ஆண்டில், 3,000 பள்ளி களில், 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு வரை உள்ள பாடத்துக்கு, இரண்டு ஆண்டுகளில் முழுமையாக, 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்கப்படும். ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை, இன்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டு, வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

சட்டசபை துணை சபாநாயகர் ஜெயராமன், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, அண்ணா பல்கலை, இன்ஜினியரிங் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

6,000 ஆசிரியர் பணியிடம் குறைப்பு : சிக்கலில் அரசு நடுநிலைப்பள்ளிகள்

ஆறாயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதால் அரசு நடுநிலைப் பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
தற்போது 6,7,8 ம் வகுப்புகளில் 100 மாணவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர்.உபரி என கணக்கிட்டு ஒரு ஆசிரியரை குறைப்பதால், மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து ஐந்து பாடங்களை நடத்துவது சாத்தியம் ஆகாது. ஏற்கனவே ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் பாடத்துடன் தமிழ், சமூக அறிவியல் பாடத்தை கூடுதலாக எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் உபரி என கூறி மேலும் ஒரு பாட ஆசிரியர் குறையும் போது மாணவர்கள்மேலும் பாதிக்கப்படுவார்கள்.உபரி என கணக்கிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 200 பேர், கோவையில் 173 என ஆறாயிரம் ஆசிரியர் பணியிடம் குறைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்ஜி., கவுன்சிலிங் விதிகள் வரும் 2ல் வெளியாகுது விபரம்

அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கான விதிகள், மே, 2ல், அறிவிக்கப்பட உள்ளன.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில்,
பி.இ., - பி.டெக்., படிப்பு களில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றைச்சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வீட்டில் இருந்தபடி அல்லது அந்தந்த மாவட்ட உதவி மையங்கள் வாயிலாக, கணினி வழி ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவு, மே, 3ல் துவங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. ஆனால், அறிவிக்கையில் இடம் பெற வேண்டிய கவுன்சிலிங் விதிகள் உள்ளிட்ட, மற்ற விபரங்கள் இடம் பெறவில்லை. கவுன்சிலிங் விதிகள் குறித்த விபரங்கள், வரும், 2ம் தேதி வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.

வழக்கமாக, அறிவிக்கை வெளியிடும் போது, அதில் அனைத்து விபரங்களும், விதிகளும் இடம்பெறும். அதை பின்பற்றி, கவுன்சிலிங் பதிவுக்கு தேவையான ஆவணங்களை, மாணவர்கள் முன்கூட்டியே தயார் செய்வர்.ஆனால், இந்த ஆண்டு, முதல் முறையாக, ஆன்லைன் கவுன்சிலிங்குக்கு மாறுவதால், விதிகளை இறுதி செய்வதில், உயர்கல்வித் துறைக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, ஏற்கனவே அமைச்சரும், செயலரும் அறிவித்த கவுன்சிலிங் தேதி மற்றும் ஆன்லைன்பதிவு தேதி மட்டுமே, அறிவிக்கையாக வெளியிடப்பட்டு உள்ளது. 'மற்ற விபரங்கள், மே, 2ல் நிச்சயம் வெளியாகும்'என, அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் குழுவினர் தெரிவித்தனர்.

புதிய தகவல்கள்! பாட புத்தகத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள்! : மாணவர் நலனுக்காக தமிழகத்தில் அறிமுகம்

தமிழக அரசின், புதிய பாட திட்டப்படி, ஒவ்வொரு பாட புத்தகத்திலும், அந்த படிப்புக் கான வேலைவாய்ப்பு தகவல்கள் இடம்பெற உள்ளன. மேலும், அந்த துறைகளில் சாதித்த வர்களின் விபரமும் சேர்க்கப்பட உள்ளது.
வேறுஎந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், புதுமையாக, தமிழகபள்ளிப் பாட புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.பள்ளி, பாட, புத்தகத்தில், வேலை வாய்ப்பு, தகவல்கள்! , மாணவர், நலனுக்காக ,தமிழகத்தில், அறிமுகம்

மாற்றம் :தமிழக பள்ளி கல்வித்துறையில், 13 ஆண்டு களுக்கு பின்,பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு உள்ளன.பள்ளிகல்வி அமைச்சர், செங்கோட்டையன் முயற்சியில், தமிழக பாடத் திட்டங்கள், சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய பாடத்தை மிஞ்சும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன. பள்ளிக் கல்வித்துறை முதன்மைசெயலர், பிரதீப் யாதவ், செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், கல்வியாளர், அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், புதிய பாட திட்டத்தை உருவாக்கினர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி தலைமையிலான குழுவினர், புத்தகங்களை தயாரித்துள்ளனர்.வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது.

இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்பு களுக்கு, முதல் பருவ தேர்வுக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்ட புத்தகங்களில், கண்ணை கவரும் வண்ணங்களுடன், பக்கத்துக்கு பக்கம் சித்திரம், 'பார்கோடு' மற்றும், இணையதள வீடியோ இணைப்பு என, அசத்தலான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

பிளஸ் 1 புத்தகத்தில், கூடுதல் அம்சமாக, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், வேலைவாய்ப்பு குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.ஒவ்வொரு பாட புத்தகத்திலும், அந்த பாடத்தை படித்தால்,என்னென்ன மேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளன; அவற்றை படித்தால், எந்தெந்த வேலை வாய்ப்புகளை பெறலாம் என்ற, விரிவான விபரங் கள், புத்தகத்தின் முகப்புரையாக தரப்பட்டுள்ளன. மேலும், அந்த படிப்புகளை படித்து, அத்துறை களில் சாதனை படைத்தோர் பற்றிய முழு விபரங்களும் தரப்பட்டுள்ளன. இதனால், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போதே, மாணவர் கள், தங்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான படிப்பு வகைகளை அறிந்து, திட்டமிடலாம்.

இந்த தகவல்களை பயன்படுத்தி, மாணவர்கள், கல்வி ஆண்டின்துவக்கம் முதல் தேர்வு வரை, லட்சியத்துடன் படித்து, அதிக மதிப்பெண் பெற முடியும். அடுத்து என்ன படிக்கலாம் என்பதை திட்ட மிடவும் உதவும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

2009 & TET போராட்டக்குழு ஆசிரியர்கள் கவனத்திற்கு....!!

*தற்போது அனைத்து வாட்சாப் குழு மற்றும் இணையத்தில் வந்து கொண்டிருக்கும்

ஒருநபர் குழுவிற்கு அனுப்பிட சொல்லும் கடிதம் மாநில போராட்டக்குழு சார்பில் வெளியிட்ட கடிதம் இல்லை. யாரும் அனுப்ப வேண்டாம் என மாநில போராட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.*

 *வரும் வாரத்தில் மாநில போராட்டக்குழு சார்பில் நமது கல்வித் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஒருநபர் குழு தலைவர்  அவர்களையும் சந்தித்த பின்னர்  மாநில போராட்டக்குழு சார்பில் கடிதம் மாதிரி அனுப்பப்படும்.  அதற்கு பின்னர் அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.*


 *2009 & TET மாநில போராட்டக்குழு

நூறு ரூபாயில் நுண்ணோக்கி-மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் அறிவியல் ஆசிரியர்


தமிழ் நாட்டில் தொடக்கப் பள்ளிகள் எத்தனை, உயர் நிலைப் பள்ளிகள் எத்தனை, மேல் நிலைப் பள்ளிகள் எத்தனை என்ற தகவல்கள்


BE - அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே கலந்தாய்வு : சுனில் பாலிவால் அறிவிப்பு

Sunday, April 29, 2018

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொறியியல் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே நடைபெறும் என உயர்கல்வித்துதறை செயலாளர் சுனில் பாலிவால் அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கு தனியாக கலந்தாய்வு நடந்தது. 

'இஸ்ரோவை பார்வையிடும் வாய்ப்பு!’ - கும்பகோணம் பள்ளி மாணவர்கள் 75 பேர் தேர்வு


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவை பார்வையிடப் பள்ளி மாணவர்கள் அனைவரையும் அனுமதித்தால் விண்வெளி துறையில் இவர்களுக்கு ஆர்வம் உருவாகும் எனக் கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

உலக அளவில் முதன்மையான இடம் வகிக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் இஸ்ரோ ஆறாவது இடம் வகிக்கிறது. பெரும் சவாலான பல செயற்கை கோள்களை விண்ணில் பாய்ச்சி சாதனைகள் படைத்து வருகிறது. இங்கு விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகிறார்கள்.

இதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற பெரும்பாலான மாணவர்களின் கனவாக உள்ளது. இந்நிலையில்தான் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளி பயிலும் 75 மாணவர்களுக்கு இஸ்ரோவை பார்வையிடுவதற்கான அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் 8 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் திறன் சார்ந்த புதுமை படைப்புகளுக்கான கண்காட்சி கடந்த ஜனவரி மாதம் கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு இஸ்ரோவை நேரில் பார்வையிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய கல்வியாளர்கள் ‘’இது மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால் இதோடு நின்றுவிடக்கூடாது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் இஸ்ரோவை பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதனால் மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சித்துறையில் ஆர்வமும் ஆரம்பநிலை புரிதலும் ஏற்படும், இதனால் இத்துறையில் அதிக எண்ணிக்கையில் விஞ்ஞானிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.” என்கிறார்கள்.

ரூ.2200 மதிப்புடைய சலுகையை அறிவித்த ஜியோ

இந்தியாவில் பழைய டாங்கிள்களை வழங்கி புதிய ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் பெறுவோருக்கு ரிலையன்ஸ் புதிய சலுகைகளை வழங்குகிறது.

அந்த வகையில் பழைய டாங்கிள்களை கொடுத்து புதிய ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் வாங்குவோருக்கு புதிய வைபை ரவுட்டர் மற்றும் ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ஜியோஃபை எக்ஸ்சேஞ்ச் குறுகிய கால சலுகையை பெற என்ன செய்ய வேண்டும்?

- ஜியோஃபை போர்டபிள் வைபை ரவுட்டரை ரூ.999 செலுத்தி வாங்க வேண்டும்

- ஜியோ பிரைம் ரூ.99 மற்றும் ரூ.198 அல்லது ரூ.299 செலுத்தி சிம் கார்டினை ஆக்டிவேட் செய்ய வேண்டும்

- உங்களின் பழைய ஜியோ அல்லாத டாங்கிளை ஏதேனும் ஜியோஸ்டோர் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் வழங்க வேண்டும்

- பழைய ஜியோ அல்லாத டாங்கிள் அல்லது மோடெமின் சீரியல் நம்பரை வழங்கி, புதிய ஜியோஃபை MSISDN நம்பரை பெற வேண்டும்

- உங்களுக்கான கேஷ்பேக் உடனடியாக மைஜியோ கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்

ரூ.2200 மதிப்புடைய கேஷ்பேக் ரூ.50 மதிப்புடைய மொத்தம் 44 வவுச்சர்களாக வழங்கப்படும், இவற்றை ரூ.198 மற்றும் ரூ.299 ரீசார்ஜ் செய்ய மட்டும் பயன்படுத்தலாம்.

கடந்த ஆண்டு அறிமுகமான ஜியோஃபை ரவுட்டர் அதிக வரவேற்பை பெற்றது. கடந்த ஆணஅடு செப்டம்பரில் வெளியான தகவல்களில் டேட்டா கார்டு சந்தையில் ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஜியோஃபை மட்டும் 91% பங்குகளை பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

 இலவச டேட்டா வழங்கியதன் மூலம் அதிக பிரபலமான ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது.

போர்டபிள் ஹாட்ஸ்பாட் சாதனம் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் வைபை வசதி கொண்டு பத்து சாதனங்களிலும், ஒரு சாதனத்திற்கு யுஎஸ்பி மூலம் இணைத்து பயன்படுத்தும் வசதியை ஜoியோஃபை ஹாட்ஸ்பாட் வழங்குகிறது.

இதில் உள்ள OLED டிஸ்ப்ளே நெட்வொர்க் சிக்னல், பவர், வைபை ஸ்டேட்டஸ் மற்றும் இதர தகவல்களை வழங்குகிறது. இந்த சாதனம் கொண்டு அதிவேக 4ஜி இன்டர்நெட் பயன்படுத்த முடியும். இத்துடன் வைபை ஹாட்ஸ்பாட்களை உருவாக்க முடியும். மேலும் ஹெச்டி வாய்ஸ் கால், வீடியோ கால், மெசேஜிங் உள்ளிட்ட வசதிகளும் வழங்குகிறது.

ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி


கலசபாக்கம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால், அந்தக் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எம்.எல்.ஏ. பாராட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட சீட்டம்பட்டு ஊராட்சி சின்னகல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன், ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குமாரி. இவர்களுக்கு பி.யுவராஜ் (வயது 22) என்ற மகனும் செண்பகவள்ளி என்ற மகளும் உள்ளனர்.

யுவராஜ் 1-ம் வகுப்பு முதல், 5-ம் வகுப்பு வரை சீட்டம்பட்டு அரசு ஆரம்ப பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆர்ப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். அவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 418 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வரை மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து விட்டு, திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. படித்துவிட்டு, ஓராண்டாக ஐ.ஏ.எஸ்.தேர்வுக்குப் படித்து வந்தார். தற்போது அவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்துக்கும், பிறந்த கிராமத்துக்கும் பெருமைத் தேடி கொடுத்துள்ளார்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், சிறுவயது முதலே படிப்பில் மிகவும் கவனம் செலுத்தி வந்தேன். அரசு பள்ளிக்கூடத்தில் படித்து, தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை எஸ்.கே.பி.பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்துக்கொண்டு இருக்கும்போது, அங்குள்ள பேராசிரியர்கள் ஐ.ஏ.எஸ். படிக்க ஊக்கப்படுத்தினர்.

அதன்படி சகாயம், இறையன்பு போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முன்னுதாரணமாக மனதில் நினைத்து படித்து வந்தேன். முதலில் சென்னையில் உள்ள மனித நேய மையத்தில் 2 மாதம் படித்தேன். நான் பிளஸ்-2 படிக்கும்போது, அரசு சார்பில் வழங்கிய மடிக்கணினியை வைத்து இணையதள வசதியுடன் படித்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் மாநிலத்தில் முதல் இடம் வரவேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், 74-வது இடம் பெற்றுள்ளேன்.

நான் ஐ.ஏ.எஸ். பயிற்சி முடித்த பின்னர், என்னை பொதுப்பணி துறை செயலாளராக நியமித்தால், கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வார நடவடிக்கை எடுப்பதுடன் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 510 குளங்கள் காணாமல்போய் உள்ளதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பேன். எனது சொந்த கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நூலகம் அமைத்து என்னை போன்ற மாணவர்கள் அதிக புத்தகங்களை படித்து அரசு தேர்வுகளில் வெற்றி பெற ஊக்குவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற யுவராஜை கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், அவருடைய வீட்டுக்கு நேரடியாக சென்று இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து பாராட்டினார். குடிசை வீட்டில் வாழும் யுவராஜீக்கு உடனடியாக பசுமை வீடு கட்டித்தரப்படும். அவருக்கு, டெல்லி சென்று பயிற்சி பெற தேவையான நிதி உதவிகள் வழங்கப்படும், என்றார்.

ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வுமுடிவுகள் நாளை வெளியீடு!!!

மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத்
தேர்வு (ஜே.இ.இ.- முதல்நிலை) முடிவுகள் திங்கள்கிழமை (ஏப்.30) வெளியிடப்பட உள்ளன.

ஜே.இ.இ. தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதலில் முதல்நிலைத் தேர்வு, பின்னர் முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐஐஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும். அதோடு, முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்களில் முதல் 2 லட்சம் பேர், அடுத்து நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவர். முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.
இதில் முதல்நிலைத் தேர்வில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தாள்-1-ன் நேரடி எழுத்துத்தேர்வு ஏப்ரல் 8-ஆம் தேதி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்கான ஆன்-லைன் தேர்வு ஏப்ரல் 15,16 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளன. முடிவுகளை ஜே.இ.இ. இணையதளத்தில் (www.jeemain.nic.in) பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதில், பி.ஆர்க். படிப்புக்கான தாள்-2 தேர்வு முடிவுகள் மே 31 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.
மே 20-இல் முதன்மைத் தேர்வு: ஜே.இ.இ. முதன்மைத் தேர்வானது மே 20 இல் நடத்தப்பட உள்ளது. இந்த ஆன்-லைன் தேர்வை ஐஐடி கான்பூர் நடத்துகிறது. இதற்குரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான ஆன்-லைன் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கி, மே 7 ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும்.

புதிய அறிவியல் புத்தகத்தில் கணினி அறிவியலுக்கு தனி அலகு! - RTI Letter


அனைத்து தரப்பினரும் வியக்கும் வகையில் மிக உயர்ந்த தரத்தில் தமிழக பள்ளிக் கல்வியின் புதிய பாடத்திட்டம்- சென்னையில் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் கருத்து

தமிழக பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது மிக உயர்ந்த தரத்திலான பாடத் திட்டம்: சென்னையில் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் கருத்து

அனைத்து தரப்பினரும் வியக்கும் வகையில் மிக உயர்ந்த தரத்தில் தமிழக பள்ளிக் கல்வியின் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச் சங்கம் சார்பில் ‘தமிழ்நாடு பள்ளிக்கல்வி திட்ட உருவாக்கம்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி பேசியதாவது: பள்ளிக்கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அளித்து வருகிறது. மதிப்பெண்கள் பிரதானப்படுத்தப்படுவதால், அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக பாடத் திட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் மாணவர்கள் படிக்கின்றனர். மற்றவற்றை தவிர்த்துவிடுகின்றனர். ஆழமாக, முழுமையாக மாணவர்கள் எதையும் கற்றுக்கொள்வதில்லை. எனவே, அனைத்தையும் மாணவர்கள் கற்க வேண்டும் என்ற அடிப்படையில் புளூபிரின்ட் அளிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று பயிற்சி பெறும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாடங்களுக்கு நடுவில் அந்த பாடத்துடன் தொடர்புடைய சுவாரஸ்ய தகவல்களும் பெட்டிச் செய்திகளாக இடம்பெறும். மேலும், அறிவியல் பாடங்களில் வாழ்க்கையோடு தொடர்புடையவற்றை எடுத்துக்காட்டுகளாக குறிப்பிட்டுள்ளோம். பாடத்துக்கும் நடைமுறைக்குமான இடைவெளி முடிந்த அளவு குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பக்க வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் QR Code அளிக்கப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்து பார்த்தால் அந்த பாடத்தின் விளக்கத்தை ஆசிரியர் ஒருவர் வீடியோவில் விளக்குவார். பாடத் திட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து விளக்குவதற்காக முதல்முறையாக ஆசிரியர் வழிகாட்டு கையேடும் தயாராகி வருகிறது. பாடங்களை புதுமையாக நடத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், அவர்கள் மூலம் மற்றவர்கள் பயன்பெறும் வகையிலும் ஆசிரியர்கள் தங்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கான தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பாடத்திட்டம் குறித்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் பயிற்சி அளிக்க உள்ளோம். இவ்வாறு அறிவொளி பேசினார்.

பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசும்போது, “சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட தமிழக பாடத்திட்டத்தின் தரம் குறைவாக உள்ளது என்று கூறி வந்தனர். தற்போது தமிழக அரசால் தயாரிக்கப்பட்டுள்ள பாடத்திட்டம், தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஆர்டி) தயாரிக்கும் பாடத்திட்டத்தைவிட அதிக தரத்தில் உள்ளது” என்றார். கருத்தரங்கில் தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் செ.அருமைநாதன், துணைத் தலைவர் ஜி.ராமலிங்கம், பொதுச்செயலாளர் நா.வீரபெருமாள், பொருளாளர் ச.ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கோடைக்கால விடுமுறையில் சென்னையை சுற்றிப் பார்க்க சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு!

கோடை விடுமுறையின் காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு

100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகராட்சி போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுத்தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோடை விடுமுறையையொட்டி, பொதுமக்கள் வசதிக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும், செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருத்தலங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக அண்ணாசதுக்கத்துக்கு 50 சிறப்புப் பேருந்துகளும், வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 20, திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு 10, பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு 8, மாமல்லபுரத்துக்கு 5, சிறுவாபுரி முருகன் திருக்கோயிலுக்கு 4, கோவளத்துக்கு 3 என மொத்தம் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி அறிவியலுக்கு என தனி ஆசிரியரை நியமிக்குமா தமிழக அரசு?


குறுஞ்செய்தி மூலம் 2 நிமிடங்களில் தேர்வு முடிவுகள்!!!


ஏற்கெனவே அறிவித்த தேதிப்படி தேர்வு முடிவுகள் வெளியாகும்; குறுஞ்செய்தி மூலம் இரண்டு நிமிடங்களில் தேர்வு முடிவுகள் கிடைக்கும் வகையில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா அரங்கில் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப முறை, கல்லூரியைத் தேர்வு செய்யும் முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து செங்கோட்டையன் பேசியதாவது:
நமது நாட்டின் உயர்கல்வி இலக்கு என்பது 23 சதவீதம். ஆனால், தமிழகத்தின் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 44.3 சதவீதம் ஆகும். தமிழகத்தில் 539 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. இதனால் மாணவர்கள் எளிதாக உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கிறது.
முதல் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் 2 ஆண்டுகளில் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்பட்டு இணையதளம் மூலம் பாடம் கற்பிக்கப்படும்.
இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் ரூ.463 கோடி மதிப்பில் இணையதள வசதி ஏற்படுத்தி நவீனப்படுத்தப்படும்.
தற்போது முதியவர்கள் பலர் ஆதரவற்றவர்களாக விடப்படுகின்றனர். இது குறித்து இளையதலைமுறையினருக்கு போதிய அறிவுரை வழங்கப்படுவது இல்லை. எனவே, பெற்றோரைப் பாதுகாப்பது, பராமரிப்பது குறித்து ஒன்றாம் வகுப்பு முதல் போதிக்கப்படும் என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாகத் தாமதம் ஆகாது.
ஏற்கெனவே அறிவித்த தேதிப்படி ( மே 16-இல் பிளஸ் 2; மே 23-இல் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்) முடிவுகள் வெளியாகும். குறுஞ்செய்தி மூலம் இரண்டு நிமிடத்தில் தேர்வு முடிவுகள் கிடைக்கும் வகையில் வெளியிடப்படும் என்றார்.

British council மின்நூலகத்தை 1 ஆண்டு இலவசமாக பயன்படுத்த அரிய வாய்ப்பு


British council மின்நூலகத்தை 1 ஆண்டு இலவசமாக பயன்படுத்த அரிய வாய்ப்பு Are you an English teacher?

2018 marks 70 years of the British Council in India. In celebration of this milestone,

we are *offering FREE access to our online library for one year to English language teachers* like you. To register, please fill up the form in the following link.

Register before 30 April

Please forward this to other English teachers as well. Do make use of this opportunity for FREE membership to the British Council online library!


CLICK HERE REGISTER

தினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவு


நாம்  தினமும் சாப்பிடும் உணவுதான், நமது உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவு சாப்பிடுவது, சிறந்த தற்காப்பு. எந்தெந்த உணவு வகைகளை சாப்பிடலாம்?

பாதாம்:

இதில் வைட்டமின் -இ, இரும்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது சிறந்த பலன் தரும்.

இஞ்சி:

இவை வயிற்று புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும். இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம்; தேனீர் தயாரிக்கும் போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.

கீரை:

அனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில், மினரல்ஸ், வைட்டமின், இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், இவை மதிப்புமிக்க உணவாக கருதப்படுகிறது. கீரையை தினமும் உணவில் சேர்ப்பதன் வாயிலாக, பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

கேரட்:

கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

பேரீச்சம்பழம்:

உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து இதில், எக்கச்கமாக உள்ளது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும் பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது உடலுக்கு சிறந்த சக்தியை தரும்.

கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே மாணவர் சேர்க்கையில் சதமடித்த நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .செங்கோட்டையன் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து


கல்வியாண்டு தொடங்குவதற்கு  முன்பே மாணவர் சேர்க்கையில் சதமடித்த நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .செங்கோட்டையன் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளியின் வளர்ச்சியைப் பாராட்டி தலைமை ஆசிரியை மற்றும் சக ஆசிரியர்கள் அனைவரையும் வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதை மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை காணொளி


அரசு உயர்நிலைப்பள்ளி பல்லவராயன்பட்டி
கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை

1இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் இந்த ஒரே கல்வி ஆண்டில் மட்டுமே ஆசிரியர்களின் பங்களிப்பு மற்றும் கொடையாளர்களின் பங்களிப்புடன் Digital Interactive smart board,projector, Amplifier speaker, cardless mic,DVD player, Bluetooth speaker, desk ,bench ,all in one printer ,மற்றும் பல


சென்ற ஆண்டு 10 ஆம் வகுப்பு 100% தேர்ச்சி பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம்

English Mobile apps for teaching


Animated Handwriting and Tracing Book for Kids.

Kids can work on their own practicing handwriting with this little book. Kids wont need parents interfering with their preschool letter tracing homework.Learning the alphabet is the first step in a child's mastery of the English language.

Alphabet Tracing, Letters A-Z, provides extensive focus on alphabet and number formation for the beginning writer. The full-page format focuses on one alphabet or number at a time, which allows additional practice for the beginning writer.

We love the alphabet and we love creating and playing with letters. These animated activities teach all different aspects of the alphabet including letter recognition, letter sounds, letter shapes and just plain fun!

These activities are dynamic and are meant not just to teach the alphabet but to make learning letters a memorable and engaging experience.

Game Includes
---------------------------
Kids Tracing Book
Letter School Book
Alphabet Tracing Book
Learn And Play Alphabets
Kids Alphabet Learning
Alphabet Learning Games
Tracing With Alphabets
Animated Letter Tracing
Talking Alphabets Games

Enjoy With FANTASTIC FUN !!!

Click here to download App

Video


5000 ஆங்கில வார்த்தைகள், 104 multicolour pages, 43 வீடியோ பாடங்களின் தொகுப்பு, ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு இலவச Phonetic method பயிற்சி




நமது தமிழக பள்ளிக் கல்வித்துறையால் தொடக்க நிலை பயிலும் மாணவர்களுக்காக அரசுப்பள்ளி ஆசிரியர்களாலேயே தயாரிக்கப்பட்ட தன்னிகரில்லாத 43 வீடியோ பாடங்களின் தொகுப்பு. வரும் கல்வியாண்டில் முதல் பருவத்திலேயே இதைக் கற்றுக் கொடுத்தால் இரண்டாம் பருவத்தில் 5000 ஆங்கில வார்த்தைகளையாவது முதல் வகுப்பு எத்தக் குழந்தையும் வாசிக்கும்.DVDஐ இந்த விடுமுறையில் போட்டுப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள். இதற்கு மிகப்பெரிய ஆங்கிலப் புலமையெல்லாம் தேவையில்லை. அடிப்படை ஆங்கில மொழியறிவே போதும்.

Word cards அட்டைகளைத் தொகுத்து புத்தக வடிவில் பல சிரமங்களுக்கிடையில் வடிவமைத்துள்ளோம்.104 multicolour pages.ஊரில் நல்லுள்ளங்கள் யாரையாவது அல்லது எப்படியாவது sponsor பிடித்து ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க மட்டும் செய்து விடுங்கள்.CBSE குழந்தைகளுக்கு நிகராக சரியான உச்சரிப்புடன் உங்கள் குழந்தைகள் ஆங்கிலம் வாசிக்கும்.100% Guarantee.

இனிவரும் காலங்களில் உள்ள syllablesக்கு ஈடுகொடுக்க இம்முறையில் படித்தால் போதும்.ஆசிரியர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் நிறைவும்,கற்பித்தலில் வெற்றியும் நிச்சயம்.word cards book ஒன்றே உங்களுக்கு மலையளவு துணைநிற்கும்.

ஆசிரியர்கள் ஒன்றிய,மாவட்ட அளவில் ஒன்றிணைந்து ஆர்வமாகக் கேட்டால் இலவசமாகக் கற்றுக் கொடுக்க எங்கு அழைத்தாலும் வருவோம்.

28/04/2018 அன்று கோபி செட்டிபாளையம் பகுதி ஆசிரியர்களுக்கு Phonetics Training தரப்பட்டது. தலைமை ஆசிரியர் அரசு தாமஸ் சிறப்பாகத் திட்டமிட்டு முன்னிருந்து நடத்தினார். ஆசிரியர்கள் வரதராஜன், இளங்கோ ஆகியோர் முதுகெலும்பாய் முகாந்திரம் அமைத்திருந்தார்கள்.
விடுமுறையில் கூட 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வியப்பூட்டும் வகையில் கலந்து கொண்டனர் எந்த விளம்பரமும் இல்லாமலேயே.Phonetic Dvdயில் நடித்த Look at my eyes புகழ் கண்ணன் ஆசிரியர் மிகச் சிறப்பாக சில எளிய techniquesஐ புரியும்படி யதார்த்தமாக ஊட்டினார். ஒருவர் கூட இடத்தை விட்டு நகரவில்லை.Time ஆகியும் இன்னும் நடத்துங்க என்று ஆர்வமாய் பங்கேற்ற விதம் ஆச்சர்யம்.Trainingன்னா எப்படி இருக்கும் என்று எல்லார்க்கும் தெரியும். ஆனால் முற்றிலும் மாறுபட்ட தேடல்.தீரா தாகம்.ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுக்கு இதைக் கற்றுத்தரும் வெறியோடு வெளியேறியதைக் காண முடிந்தது.

ஆசிரியர்கள் மிக ஆர்வமோடும்,தங்கள் பள்ளியை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்ற திட்டமிடலோடும் முன் வருதல் காலத்தின் கட்டாயம்.இல்லையேல் தொழில்நுட்ப உலகில் காணாமலேயே தொலைந்து விடுவோம்.

சொல்லிக் கொடுக்க volunteers நாங்க ரெடி.நீங்க தான் தயாராகனும்.

அழிவின் விளிம்பில் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு ஆக்ஸிஜன் ஏற்றும் முயற்சி இது.ஆங்கில பயம் போக்கும் அணு ஆயுதம் இது.

Dvd & Books தொடர்புக்கு only what's app மட்டும். 9382707070.முந்துவோருக்கு முன்னுரிமை.இருப்பது பகிரப்படும்.

அரசுப் பள்ளிகளையும்,மாணவர் சேர்க்கையையும் காப்பாற்ற நினைத்தால் வாருங்கள்.There is no time.நமக்கு நாமே பாதை அமைப்போம்.உடனடி உபாயங்கள் செய்வோம்.கண்டிப்பாக எல்லோருக்கும் Share பண்ணுங்கள்.தெரியப் படுத்துங்கள். தேவைப்படுவோருக்கு இத்தகவல் தேவாமிர்தமாகப் பகிரட்டும்.பரவட்டும்.

'டிஜிட்டல்' கல்வி திட்டம் பல்கலைகளுக்கு உத்தரவு

சென்னை, உயர் கல்வி நிறுவனங்களில், 'டிஜிட்டல்' கல்வி திட்டத்தை அறிமுகம் செய்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்யும்படி, பல்கலைகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும், அனைத்து தரப்பினரும், அவர்கள் விரும்பும் பாடங்களை படிக்கும் வகையில், 'டிஜிட்டல்' கல்வி முறையை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக, 'ஆன்லைன்' சான்றிதழ் படிப்புகள், அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐ.ஐ.டி., போன்றஉயர் கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் படிப்புகளை நடத்தி, சான்றிதழ் வழங்குகின்றன.

இந்நிலையில், 'மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளும், டிஜிட்டல் கல்வி திட்டத்தை, கட்டாயம் அறிமுகம் செய்ய வேண்டும்' என, யு.ஜி.சி., என்ற, பல்கலை மானிய குழு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றிய அறிக்கையை, அரசுக்கு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், ஜூலை, 27ல், மத்திய மனிதள மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ள, துணை வேந்தர்கள் கூட்டத்திலும், இதுபற்றி விவாதிக்கப்பட உள்ளது.

அரசு பள்ளியை தாங்கிப் பிடிக்கும் பெற்றோர்!ஆசிரியரின் புது 'பார்முலா'வுக்கு வெற்றி!

கோவை:மாணவர் சேர்க்கைக்காக பல அரசு பள்ளிகள், திண்டாடி வருகின்றன. பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது தான், தற்போதைய சவாலாக உள்ளது. இச்சூழலில், பெற்றோரே ஒரு பள்ளிக்காக, தாமாக முன்னின்று விளம்பரம் செய்வதாக, தகவல் வந்தது.
விசாரித்தபோது, உக்கடம், மீன் மார்க்கெட் பின்புறமுள்ள, ஒக்கிலியர்பாளையம், மாநகராட்சி தொடக்கப்பள்ளி என்பது தெரியவந்தது.பள்ளி முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத சூழலில், மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் குவிகின்றனர். தனியார் பள்ளிக்கும், இப்பள்ளிக்கும் உள்ள ஒரே வித்தியாசம், சீருடை மட்டும் தான் என்கின்றனர், அப்பகுதி வாசிகள்.இவர்களின் வார்த்தைகளில் அடிக்கடி தவறாமல் இடம்பெற்ற பெயர், ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜார்ஜ். பரபரப்பாக விழிப்புணர்வு பணிகளுக்கு தயாராகி கொண்டிருந்தவரிடம் பேசியபோது...தொடக்கப்பள்ளி தான், கல்வியின் அடித்தளம். இங்கு சரியாக வழிநடத்தப்படுபவர்கள், எத்தகைய சூழலிலும், எதிர்நீச்சல் போடுவார்கள். வார்த்தையும், எழுத்தும் உச்சரிக்க தெரிந்தபின், மனப்பாடம் செய்விப்பது தவறு.புத்தகத்தில் உள்ளதை தாண்டி, என்ன கற்று கொடுக்கிறோம் என்பதில் தான், ஆசிரியரின் தனித்தன்மை வெளிப்படும். எனக்கு, தனித்துவமான ஆசிரியராக இருக்க வேண்டுமென்பதே விருப்பம். இதற்காக, வகுப்பு நிகழ்வுகள் முழுவதும், செயல்வழி கற்றலாக மாற்றி விட்டோம். இப்படி சொல்லி கொடுப்பது, ஆயுள் முழுக்க மறக்காது.எல்லா பாடங்களுக்கும், செயல்திட்டங்கள் தயாரித்துள்ளோம். இதை மாணவர்களே தயாரித்து, வகுப்பறையில் வைக்கின்றனர். கணிதத்தில் கொள்ளளவு என்ற பாடத்திற்கு, ஒரு லிட்டர், அரை லிட்டர் என அளவைகள் கொண்ட, பாட்டில்கள் சேகரித்து, எப்படி அளப்பது என்பதை சொல்லி கொடுக்கிறேன்.

குழுவாக பிரித்து, லிட்டர் அளவீடு குறித்து, வினாடி-வினா நடத்தப்படுவதால், மாணவர்கள் எளிதில் உள்வாங்கி கொள்கின்றனர். ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், பட்டம் குறித்த பாடம் உள்ளது. இதை செய்யும் முறை குறித்து, மாணவர்களுக்கு விளக்கியதோடு, பட்டம் திருவிழாவை பள்ளியில் நடத்தினோம்.இதுபோன்ற செயல்பாடுகளை,பெற்றோர் அறிந்து கொள்ள மாதந்தோறும் கூட்டம் நடத்துகிறோம். பள்ளிக்கு விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கு, மாதந்தோறும் பரிசுகள் வழங்குகிறோம்.தலைமையாசிரியர் விசாலாட்சி,ஆண்டுவிழா, விளையாட்டு போட்டிகள், அறிவியல் கண்காட்சி நடத்துதல் உள்ளிட்ட பள்ளி சார் செயல்பாடுகளுக்கு,பள்ளி மேலாண்மை குழுவின் ஆலோசனைகளையும் பெறுகிறார்.

ஒரு பள்ளியின் வளர்ச்சியில், பெற்றோரின் பங்கும் இருந்தால், மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்பே இல்லைஎன்றார் ஆசிரியர் கிறிஸ்டோபர்.பெண்கல்வி குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு, மாணவர்கள் ஒத்திகை பார்த்து கொண்டிருந்தனர். பொதுக்கூட்டம் நடத்தி, மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான, சிறுமுயற்சி என்ற ஆசிரியருக்கு, கைக்குலுக்கி விடைபெற்றோம்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,'ஆன்லைன்' மாணவர் சேர்க்கை

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், இளநிலை படிப்பு மாணவர்கள் சேர்க்கையில், 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 2018 - 19ம் கல்வி ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கும் முறை, கொண்டு வரப்பட்டுள்ளது.

பி.எஸ்சி., வேளாண்மை, தோட்டக்கலை, பி.பார்ம், பி.எஸ்சி., நர்சிங், பி.பி.டி., - பி.ஓ.டி., மீன் வள அறிவியல் - பி.எப்.எஸ்சி., ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த அனைத்து பட்டப் படிப்புகள் ஆகியவற்றுக்கு, 'ஆன்லைன்' முறையில், வரும்m மே, 31ம் தேதி வரை, மாணவர்கள் பதிவு செய்யலாம்.முற்றிலும் தகுதி அடிப்படையிலும், கலந்தாய்வு முறையிலும் மாணவர் சேர்க்கை நடக்கும். கலந்தாய்விற்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.'மேலும் விபரங்களுக்கு, பல்கலைக் கழக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்' என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது

பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், கல்வித் தரத்தை உயர்த்தவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, கல்வி அமைப்பில் மாற்றம் செய்யவும், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.இதன்படி, 13 ஆண்டு கால பழைய பாடத் திட்டம், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், தேர்வுத் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொது தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.மொபைல் போனில் தேர்வு முடிவுகள், எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பும் திட்டம், 2017ல் அமலானது.இந்நிலையில், மாணவர்களுக்கான தேர்வு சுமையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், தமிழ் அல்லது விருப்ப மொழிப் பாடம் மற்றும் ஆங்கில பாடங்களில், தலா இரண்டு தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதை, ஒவ்வொரு மொழிப் பாடத்துக்கும், ஒரு தாளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவால், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, தற்போது நடத்தப்படும் எட்டு தேர்வுகள், ஆறு தேர்வுகளாக குறையும். இதனால், மாணவர்களுக்கும், தேர்வுத் துறைக்கும் சுமை குறையும் என, கல்வியாளர்கள் தரப்பில், பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு மட்டும், மொழி பாட தேர்வின் எண்ணிக்கையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும், விரைவில் அரசாணையாக, மொழிப் பாடத் தாள் குறைப்புக்கான அறிவிப்பு, வெளியாக உள்ளது.அதேபோல், மொழி பாடங்கள் மட்டுமின்றி, முக்கிய பாடங்களின் தேர்வு எண்ணிக்கையை குறைக்கவும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.'முக்கிய பாடங்களை குறைக்க, கல்வியாளர்கள் தரப்பில், முரண்பாடான கருத்துகள் உள்ளதால், விரிவான ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.

இன்றைய ராசிபலன்கள்

 சித்திரை 16 -29.04.2018
_ஞாயிற்றுக்கிழமை

*☸மேஷம் :-*

நிர்வாகம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் மூலம் நற்பெயர்கள் வந்தடையும். தாய்வழி உறவுகளால் ஆதரவான சூழல் அமையும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : நற்பெயர்கள் வந்தடையும்.
பரணி : அறிமுகம் உண்டாகும்.
கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


*☸ரிஷபம் :-*

எண்ணிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் சார்ந்த செயல்களால் இலாபம் கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். இளைய சகோதரர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
ரோகிணி : இலாபம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சி உண்டாகும்.



*☸மிதுனம் :-*

பணி சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். புத்திரர்களால் இலாபகரமான செய்திகள் வந்தடையும். அந்நியர்களின் எதிர்பாராத உதவிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விளைநிலங்களால் சுப விரயம் ஏற்படும். நினைவாற்றல் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
திருவாதிரை : இன்பமான நாள்.
புனர்பூசம் : சுப விரயம் உண்டாகும்.




*☸கடகம் :-*

தைரியத்துடன் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாரிசுகளால் பெருமையடைவீர்கள். பங்காளிகளுக்கு இடையேயான உறவு நிலை மேம்படும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : பெருமையடைவீர்கள்.
பூசம் : உறவு நிலை மேம்படும்.
ஆயில்யம் : சாதகமான சூழல் அமையும்.


*☸சிம்மம் :-*

தூர தேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்கள் பணியில் மேன்மை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். புதிய வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : சாதகமான முடிவு கிடைக்கும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.
உத்திரம் : புகழப்படுவீர்கள்.


*☸கன்னி :-*

தாயின் ஆதரவினால் பொருட்சேர்க்கை உண்டாகும். செய்யும் தொழிலில் புதுவித மாற்றங்களை செயல்படுத்தி இலாபம் அடைவீர்கள். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும். நண்பர்களிடம் உரையாடும்போது கவனம் தேவை. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

உத்திரம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படும்.
சித்திரை : கவனம் தேவை.


*☸துலாம் :-*

உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். திருமண வரன்கள் கைகூடும். அரசு பணிக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பது சுபிட்சத்தை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : புதிய நட்பு கிடைக்கும்.
சுவாதி : திருமண வரன்கள் கைகூடும்.
விசாகம் : வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.



*☸விருச்சகம் :-*

பொது நலத்திற்காக நன்கொடைகளை கொடுத்து மகிழ்வீர்கள். உயரமான இடங்களில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணியை மேற்கொள்ளவும். தந்தை செய்த அறச்செயல்களால் மேன்மையான சூழல் உண்டாகும். பெரிய நிறுவனங்களிலிருந்து கௌரவ பதவிகள் வந்தடையும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : கவனத்துடன் செயல்படவும்.
அனுஷம் : மேன்மையான சூழல் அமையும்.
கேட்டை : பதவி உயர்வு கிடைக்கும்.


*☸தனுசு :-*

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தாயின் உடல்நிலையில் கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : அனுசரித்து செல்லவும்.
உத்திராடம் : சுப செலவுகள் உண்டாகும்.



*☸மகரம் :-*

பணியில் உள்ளவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சாதகமான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து உறவு நிலை மேலோங்கும். பொதுக்கூட்ட பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். விவாதங்களில் சாதகமான சூழலால் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
திருவோணம் : உறவு நிலை மேலோங்கும்.
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.



*☸கும்பம் :-*

இளைய உடன்பிறப்புகளால் அனுகூலமான சூழல் அமையும். மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்காக திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : புதிய நட்பு கிடைக்கும்.
சதயம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.
பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.



*☸மீனம் :-*

மனதில் தேவையற்ற குழப்பங்கள் தோன்றும். சமூக சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் எற்படும். கடனால் மன வருத்தம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவித முயற்சியால் நன்மைகள் உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் பணியில் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : புகழ் உண்டாகும்.
உத்திரட்டாதி : மன வருத்தம் உண்டாகும்.
ரேவதி : முயற்சியால் நன்மை உண்டாகும்.

DEE - MIDDLE HM TO AEEO APPLICATION FORM - 2018






National ICT Awards for School Teachers-2018



Letter to Secretaries/Commissioners of School Education in States/UTs and Autonomous bodies set up under MHRD last date upto 31stJuly, 2018 Click Here

News paper Advertisements English | Hindi

Entry Form and ICT Award Guidelines for 2018  Click Here

பள்ளி இலவச திட்டங்கள் விரைவுபடுத்த அரசு முடிவு

பள்ளி மாணவ - மாணவியருக்கு, வரும் கல்வியாண்டில், இலவச திட்டங்களை செயல்படுத்த, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்காக, பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இலவச சீருடைகள், புத்தகங்கள் போன்றவை வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களை, வரும் கல்வியாண்டில், விரைவாக செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக, 16.16 லட்சம், 'ஜியாமெட்ரி பாக்ஸ்' வாங்க, 5.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.

அதேபோல், 15.15 லட்சம் பெட்டி, வண்ண பென்சில் வாங்க, 2.53 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ - மாணவியருக்கு, 58 லட்சம் ஜோடி, இலவச காலணிகள் வழங்குவதற்காக, 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றை வாங்கவும், டெண்டர் கோரப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அட்டை இந்த ஆண்டு வழங்கப்படுமா?

'ஸ்மார்ட்' அட்டை வழங்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டிலாவது நடைமுறைக்கு வருமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை விபரங்களில், பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால், திட்டங்களை அமல்படுத்துவதும், அவற்றுக்கு நிதி ஒதுக்குவதும் சிக்கலாக உள்ளது.

எனவே, மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு விபரங்களை தெரிந்து கொள்ள, ஸ்மார்ட் அட்டை வழங்க, அரசு முடிவு செய்தது.இந்த திட்டம், 2011ல் அறிவிக்கப்பட்டது. இதற்காக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதார் எண்கள், மாணவர்களின் ரத்த வகை, பெற்றோர் விபரம், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில், மாணவர்களுக்கு, 'எமிஸ்' என்ற, கல்வி இணையதள மேலாண்மை எண், உருவாக்கப்பட்டது.இந்த எண், ஒவ்வொரு மாணவருக்கும், பிளஸ் 2 முடிக்கும் வரை, மாறாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த எண் அடிப்படையில், மாணவர்களுக்கு மின்னணு, 'சிப்' பொருத்தப்பட்ட, ஸ்மார்ட் அட்டை வழங்க முடிவானது.திட்டம் அறிவிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் ஆகியும், இன்னும், ஸ்மார்ட் அட்டை வழங்கப்படவில்லை. இந்த அட்டை வழங்கப்பட்டால், பள்ளிகள் மாற்றுச் சான்றிதழ் தர மறுத்தாலும், ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி, மாணவர்கள், மற்றொரு பள்ளியில் சேர முடியும்.

போலி மாணவர்கள் பெயர்களை, பள்ளிகளின் பதிவேட்டில் சேர்க்க முடியாது. அரசின் திட்டங்களை, போலி மாணவர்களின் பெயரில், யாரும் அபகரிக்க முடியாது. அரசுக்கு ஏற்படும் வீண் செலவுகளும் குறையும். இதுபோன்ற பல நன்மைகள் உள்ளன. 'எனவே, இனியும் தாமதம் செய்யாமல், ஸ்மார்ட் அட்டை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பள்ளிகள் மூடும் முடிவு : 7,500 ஆசிரியர் பணியிடங்கள் பறிபோகும்

மாணவர் எண்ணிக்கை குறைவை காரணம் காட்டி அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளை மூடுவது தனியார் பள்ளிகளை மேலும்  ஊக்குவிக்கும் என்றும், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு திருப்பிவிடப்படும் நிதியை தடுத்து அரசுப்பள்ளிகளை  அந்நிதியில் மேம்படுத்தலாம் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகளை மூடும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது. மேல்நிலைப்பள்ளிகளில் 15 பேருக்கு குறைவாக இருக்கும் குரூப்பை மூட வேண்டும் என்றும், 30 பேருக்கு குறைவாக இருக்கும் குரூப் மாணவர்களை  அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும், இந்த குரூப்பில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் சென்று பாடம்  எடுக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை ஆங்கிலவழிப்பிரிவில் 15க்கும் குறைவான மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க  வேண்டும். அல்லது தமிழ்வழிக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய பணி நிரவல் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 29  ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் மாணவர் குறைவை காரணம் காட்டி மூடப்படும் நிலை ஏற்படும். அதோடு 20க்கும்  குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள 33 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்படும்.

அதோடு தொடக்கப்பள்ளிகளில் 7,500 ஆசிரியர் பணியிடங்கள் காணாமல் போவதுடன், அப்படியே பணி நிரவல் செய்யப்பட்டாலும் 5,000 ஆசிரியர்களின்  நிலை கேள்விக்குறியாகும். இது ஒருபுறம் என்றால் கிராமப்புறங்களில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவர்  எண்ணிக்கை குறைந்தால் அப்பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வலியுறுத்துகிறது.

இந்த செயல்முறைகள் நடைமுறைக்கு வரும்போது கிராமப்புறங்களில் பள்ளி இடைநிற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும். சராசரி  எழுத்தறிவு பெறாதவர் விகிதாச்சாரமும் உயரும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. இதன் மூலம் காமராஜரின் கனவை சிதைக்கும்  முயற்சியில் அரசு இறங்கியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது என்பது கல்வியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி 300 குடியிருப்புகளுடைய ஊரில் 1 கி.மீ இடைவெளியில் தொடக்கப்பள்ளி, 2 கி.மீ இடைவெளியில் நடுநிலைப்பள்ளி,  32 கி.மீ இடைவெளியில் உயர்நிலைப்பள்ளி, 5 கி.மீ இடைவெளியில் மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும். ஆனால், அரசுப்பள்ளி இருக்கும்  இடத்திலேயே 500 மீட்டர் இடைவெளியில் தனியார் பள்ளிகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளிப்பது புதிராக உள்ளதாக வேதனை  தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.

இதே கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீதம் ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். 10ம் வகுப்பு  பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் ஏழை மாணவர்கள் அவர்கள் விரும்பும் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட வேண்டும். இந்த  விதிகளின் கடந்த ஆண்டு வரை மொத்தம் 60,000 மாணவர்களுக்கு மேல் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டு, அரசின் நிதி ₹60 முதல் ₹90  கோடி வரை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிதியை அப்படியே அரசு பள்ளிகளுக்கு திருப்பி மேம்பாட்டுப்பணிகளை செய்திருந்தால் நிதியை பெறும்  அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வியை மாணவர்களுக்கு தர முடியும். இதை ஏன் அரசு செய்யவில்லை? அப்படியென்றால் அரசுக்கே  அரசுப்பள்ளிகள் மீது நம்பிக்கை இல்லையா? முதலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதை கட்டாயமாக்க  வேண்டும். அத்துடன் தனியார் பள்ளிகள் தொடங்கப்படுவதற்கான கட்டுப்பாடுகளையும் கடுமையாக்க வேண்டும்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபுவிடம் கேட்டபோது, ‘பள்ளிக்கல்வி இயக்குனரின் புதிய  செயல்முறைகள் அரசு பள்ளிகளை இழுத்து மூடும் அளவில் உள்ளது.

அதோடு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத  மாணவர் சேர்க்கைக்காக அரசு நிதி இதுவரை ₹90 கோடி வழங்கப்பட்டதை ஆண்டுக்கு 10 பள்ளிகள் வீதம் மேம்படுத்தியிருந்தால் ஏழை  மாணவர்களுக்கு தரமான கல்வி உறுதி செய்யப்பட்டிருக்கும். இவ்விஷயத்தில் கல்வியாளர்களும், ஆசிரியர் சங்கங்களும் சரியான முடிவை எடுக்க  வேண்டும். அதற்கு முன்பாக தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும்’ என்றார்.

தமிழக அரசு வருவாயில் 61% அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கே செலவாகிறது - முதல்வர் பரபரப்பு பேச்சு

Saturday, April 28, 2018


வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்யும் அரசுப்பள்ளி- மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்த்தால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தங்க காசு பரிசு


அமெரிக்க நிறுவனம் மூலமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்


அமெரிக்காவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்குப் பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

புத்தாக்க அறிவியல் விருது



SAMAGRA SHIKSHA ABHIYAN-An Integrated Scheme for School Education-FRAMEWORK FOR IMPLEMENTATION

Tamil Teaching app!


Tamil Teaching app!

Agaram Tamil Teacher is the new exciting educational app designed to teach the beautiful Tamil language to your children. The app is highly interactive and contains 7 learning activities and 11 educational games all featuring stunning graphics, soothing music and beautiful voice prompts in Tamil to keep your children interested and entertained while they learn our treasured mother tongue Tamil. Although the app is intended for children who are starting to learn Tamil, it can in fact be used by anyone wanting to learn Tamil.

Carefully crafted by a team of educators who take learning and Tamil Language to heart, the app features 7 highly interactive learning activities teaching the following topics to your child:
- Tamil vowel letters
- Tamil consonant letters
- Tamil compound letters
- Shapes
- Colors
- Numbers
- Vocabulary

The app also features 11 educational interactive games to make your child’s Tamil learning experience rewarding and fun. The difficulty level of the games can be configured to suit your child’s age and needs. The games cover the following areas:
- Tamil vowel letters
- Tamil consonant letters
- Tamil compound letters
- Shapes and Colors
- Numbers
- Counting
- Vocabulary
- Telling Time
- Addition
- Subtraction.
- Shape Puzzles

The beautiful Tamil literature is filled with great works full of high ideals. Everyone who come across the great literary works in Tamil is enticed to learn more and to vie for greatness. Entrance into this great world starts with the learning of “agaram” - the first letter in Tamil alphabets.
Thus our app is also named after the beautiful letter “agaram”, because it is our hope that by starting their Tamil lessons with our software your children can make their first step into the wonderful world of Tamil literature.

Click the below link to download

Tamil Teaching app!

video

பகுதிநேர ஆசிரியர்களும் போராட திட்டமா ? - பரவுது வதந்தி !


அரசின் பெரும்பகுதி நிதி ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவிடப்படுகிறது - போராடும் அரசு ஊழியர்கள் இதை சிந்திக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமி


தமிழக அரசின் பெரும்பகுதி நிதி, அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவாகிறது, அதனால், கூடுதல் சம்பளம் கேட்டு போராடுவோர் சிந்திக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

சேலம் மாவட்டம், இடைப்பாடியில் புதிய கட்டடங்கள் திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

இதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, தமிழகத்தில் எட்டு கோடி பேர் உள்ளனர். 13 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இன்னும் கூடுதல் சம்பளம் வேண்டும் என ஊழியர்கள் போராடுகின்றனர்.

மாநில அரசு மூலம் 69, மத்திய அரசு மூலம் 31 சதவீத வரி அரசுக்கு கிடைக்கிறது. இதில் மாநில வரியில் 61 சதவீதம் ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. மீதிர வரி மூலம் 7.87 கோடி பேருக்கு தேவையான திட்டப்பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், போராடும் அரசு ஊழியர்கள் அவர்களை தூண்டும் எதிர்க்கட்சியினர் இதை சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

8-ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறை : பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி

8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில்
வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு, 6ம் வகுப்பு, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இவற்றில் பிளஸ் 1 தவிர மற்ற வகுப்புகளுக்கு முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டவாரியாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு அன்றைய தினமே பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இப்புதிய முயற்சியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை புதிய பாடத்திட்டங்களை வடிவமைத்தக்குழுவே தயாரித்து வழங்கியுள்ளது. அதன்படி ஆன்லைன் தேர்வுமுறைக்கு ஏற்ப புதிய பாடப்புத்தகங்களில் கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து வரும் கல்வி ஆண்டில் முதல்கட்டமாக 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப தமிழக அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் முழுமையாக தொடங்கிய பின்னர் தொடக்கப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் தேர்வுமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

109 ஆத்திசூடி கூறும் இரண்டாம் வகுப்பு மாணவி


ஊ.ஒ.தொ.பள்ளி திருப்பத்தூர் ஒன்றியம் சிவகங்கை மாவட்டம் Manamelpatti. . கா. கனிஷ்கா  இரண்டாம் வகுப்பு மாணவி.   109 ஆத்திசூடி  கூறினாள்

வாழை இலைக்குளியல் செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானிகள்.!




இதுக்கு பேருதான் வாழை இலைக் குளியல்.
வாழை இலையால நம்ம உடம்பு முழுவதும் மறைக்கப்பட்டு வெயிலில் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்.

வாழை இலைக்குளியல் செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானிகள்.!
வாசியை சுத்தப்படுத்தும் இரகசியம் தெரிந்து விட்டால் உடலின் சேர்ந்து விட்ட அளவுக்கதிகமான கரியமில வாயுவை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றி விடலாமே.!

வாழை இலைக்குளியல்
செய்முறை

1. இயற்கை வழியில் விளைவித்த வாழை இலைகளை ஆளுக்கு தகுந்தாற்போலும் உருவத்திற்கு தகுந்தாற் போலும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுமாராக ஒருவருக்கு  எட்டு இலைகள் வரை தேவைப்படும்.!
2.தரையில்  ஆறு வாழை நார், நூல் கயிறு அல்லது தென்னங்கயிற்றை வரிசையாக போட வேண்டும்.
3.அதன் மேல் நான்கு வாழை இலைகளை நன்றாக துடைத்து இலையின் தண்டை கையால்  லேசாக சதைத்து போடவேண்டும்.!
4.ஒரு காட்டன் டவலை சிறிது நனைத்து தலையில் மப்ளர்போல் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.
5.நான்கு முதல் ஆறு டம்ளர் வரை நீரை குளியல் செய்யப் போகின்ற வருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.!
6.பிறகு மெதுவாக அவரை வாழையில் படுக்க வைத்து விட்டு அவரின் மேல் நான்கு முதல் ஆறு இலைகளை  தலை முதல் பாதம் வரை வெளியே தெரியாமல் வைத்து நன்றாக மூடிவிடவும். சுவாசம் செய்வதற்காக மூக்கின் மேல் வைக்கும் இலையை மட்டும் லேசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.!
7.அப்படியே கயிறால் கட்டி படுக்க விடவும். இருபது முதல் 30 நிமிடம் வரை இப்படி இருக்க வேண்டும். உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேல் இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன். கட்டுகளை அவிழ்த்து இலையை எடுத்துவிடவும்.
8.எழுந்தவுடன் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை உடலில் இருந்து கெட்டநீர் வெளியேறி இருக்கும்.!
9.எழுந்தவரை நன்றாக ஐந்துமுறை சுவாசம் செய்ய வைத்து
தேன்  மற்றும் சிறிது இந்துப்புக்கலந்த  இரண்டு டம்ளர் நீரை குடிக்க கொடுக்க வேண்டும்.பிறகு 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.!

வாழைகுளியல் பலன்கள்
""''"'''"''"""""""'"'"'"
1.உடல் எடை சீராக இருக்கும்
2.உடலில் உள்ள கெட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும்
3.தோல் நோய்கள் குணமாகும்
4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன்  போன்ற நோய்கள் கட்டுப்படும்
5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும்
6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும்
7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும்
8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும்
9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும்
10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.!

இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்.!

குறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணிவரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்.!
கீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்.!
வாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும்.!
அதீத மன அழுத்தம், மனக்கோளாறுகள், கர்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்திற்காக பல ஆண்டுகள் மாத்திரை எடுப்பவர்கள், முற்றிய நிலையில் உள்ள இதய நோயாளிகள் வாழை இலை குளியல் எடுப்பதை தவிர்ப்பது நலம் பயக்கும். மற்றபடி 10 வயது முதல் நூறு வயதுவரை உள்ள ஆண், பெண் அனைவரும் வாழையில் குளியல் செய்து உடலில் பிராண சக்தியை அதிகரிக்கலாம்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

மீண்டெழும் அரசுப்பள்ளிகள்-புத்தக விமர்சனம்


ஆசிரியர்: பேரா.நா.மணி

“ஒரு அரசுப்  பள்ளியின் மரணம் என்பது அவ்வூரில் இதுவரை நடந்த மொத்த மரணங்களைக் காட்டிலும் துக்ககரமானது” - பேரா.நா.மணி.

• அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கிடுக….
• தனித்தனி வகுப்பறைகள்….
• வகுப்பிற்கொரு ஆசிரியர்…
• சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள் இவற்றை உறுதிப்படுத்துக..
• செயல்வழிக்கற்றல், தொடர் மதிப்பீட்டு முறைகளை செழுமைப்படுத்துக…
• நலத்திட்ட உதவிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்திடுக…
• கல்வியில் தனியார் மயத்தைக் கைவிடுக…
• அதிக நிதி ஒதுக்கி அரசுப்பள்ளிகளைப் பாதுகாத்து பலப்படுத்துக…
• உண்மையான சமச்சீர் கல்வி முறையினை அமல்படுத்துக…
• மத்திய அரசின், “அரசு தனியார் கூட்டு மாதிரிப் பள்ளி’  திட்டத்தை நிராகரித்திடுக…..

இவைதான் இந்நூலின் பிரச்சாரக் கருத்துக்கள். இந்தப் பிரச்சாரக் கருத்துக்காகவே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலை எழுதியுள்ளவர் ஈரோடு கலைக்கல்லூரியின் பொருளியல் துறைப் பேராசிரியரான நா. மணி அவர்கள். இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர்.   

பொதுப்பள்ளிகளான அரசுப்பள்ளிகளின் நலிவு என்பது சமூகத்தின் நலிவு. இன்றைய வணிகக் கல்விச் சூழலில் ஏழை எளிய மக்களின் கடைசி புகலிடமாக இருப்பது அரசுப்பள்ளிகளே. இந்த அரசுப்பள்ளிகள் மட்டும் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டால் கல்வியறிவில்லா அடுத்த தலைமுறை உருவாவதை யாரால் தடுக்க முடியும்?

முன்னீடாக என்னும் தலைப்பில் அரசுப்பள்ளிகள் வீழ்ந்து தனியார் பள்ளிகள் கோலோச்சுவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அழகுற விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

“நமது நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் சீர்குலைந்ததில் அல்லது சீர்குலைக்கப்பட்டதில் அரசு, ஆசிரியர், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பங்குண்டு. அரசின் பங்கு சற்று கூடுதல் என வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். தனியார்மயம் என்பதைவிட வணிகமயம், பள்ளிக்கல்வி முழுவதிலும் வியாபித்துள்ளது. தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி முறையையும், பள்ளிக்கல்வி தரத்தையும் அது முற்றிலும் சீரழித்துவிட்டது. இன்று சற்றேறக்குறைய 2000 அரசு தொடக்கப்பள்ளிகள் சாவின் விளிம்பின் உள்ளதாய் கூறுகிறார்கள். ஒரு பள்ளியின் மரணம் என்பது அவ்வூரில் இதுவரை நடந்த மொத்த மரணங்களைக் காட்டிலும் துக்ககரமானது. அரசுப்பள்ளிகளின் மரணம் எந்நாளும் இயற்கையானதல்ல. திட்டமிட்டு நிகழ்த்தப்படும் படுகொலை என்று கணக்கில் கொள்ளப்பட வேண்டும். இனி அக்கிராமத்தில் பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தையையும் தனியார் பள்ளியை நோக்கியே விரட்டுவது அல்லது மீண்டும் எழுத்தறிவற்ற சமூகத்தை உருவாக்குவது என்ற மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும்” என்ற சமூகப்பேரவலத்தை முன்னுணர்ந்து காமராசர் கட்டமைத்த பொதுப்பள்ளிகளை மீட்டுவாக்கம் செய்வதில் ஆசிரிய சமுதாயம் ஆற்ற வேண்டிய கடமைகளை சிறு சிறு கட்டுரைகளில் இந்நூலில் விளக்கியுள்ளார்.
இக்கட்டுரைகளில் தமிழ்நாட்டு அரசுப்பள்ளிகளில் தங்களது தனித்துவமான செயல்பாடுகளால் மாணவர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவில் உயர்த்திய ஆசிரியர்களைப் பற்றிய அழகான பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இவர்களை நமக்கு அறிமுகம் செய்வதன் மூலம் நம்மையும் அரசுப்பள்ளிகளை பாதுகாக்கும் அரும்பணி ஆற்றிட ஊக்கப்படுத்துகிறார்.

• நாமக்கல் மாவட்டம் ஊத்துப்புளிக்காடு பள்ளியின் செயல்பாடு.
• ஈரோடு நகராட்சி துவக்கப் பள்ளி.
• கரூர் நரிக்கட்டியூர் பள்ளி.
• காஞ்சிபுரம் உத்திரமேரூர் நடுநிலைப் பள்ளி.
• கன்னியாகுமரி மாவட்டம் பூச்சிவிளாகம் தொடக்கப்பள்ளி
என மாணவர்களின் எண்ணிக்கையை தங்களது தனித்துவமான செயல்பாடுகளால் வெகுவாக உயர்த்திய ஆசிரியர்களையும், பள்ளியையும் பற்றி இந்நூல் வழியாக நாம் அறிந்து கொள்ளும்போது நமக்கும் ஊக்கம் பிறக்கிறது. உதாரண ஆசிரியர்களை அறிமுகப்படுத்தி மற்ற ஆசிரியர்களையும் செயல்பட வைக்கும் உத்தியின் மூலம் இந்நூலானது சிறப்புறுகிறது. மேலும் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த பல முயற்சிகள் எடுத்தும் பலன் கிடைக்காமல் சோர்ந்து போயிருக்கும் ஆசிரியர்களுக்கும். 32 பக்கங்களே கொண்ட இச் சிறுநூல் உற்சாகமளிக்கும்.வாசித்துப் பாருங்களேன்.
நன்றி!

புத்தகம்: மீண்டெழும் அரசுப் பள்ளிகள்
ஆசிரியர்: பேரா.நா.மணி
வெளியீடு : அறிவியல் இயக்கம்& பாரதி புத்தகாலயம் (2014)
விலை:15/- பக்கங்கள்:32.

நன்றி

இராமமூர்த்தி .

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One