எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

1000 பள்ளிகளுக்கு கிராமங்களில் 'பூட்டு' : ஆசிரியர் சங்க நிர்வாகி தகவல்

Wednesday, April 25, 2018

''கிராமங்களில் 1,000 பள்ளிகளை மூடவும்,5,000 ஆசிரியர் பணியிடங்களையும் குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என 'ஜாக்டோ' உயர்மட்ட குழு உறுப்பினர் வின்சென்ட் பால்ராஜ் தெரிவித்தார்.
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி மறியல், விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு போராட்டம், தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் நடந்தது. திண்டுக்கல்லில் மறியல் செய்த 50 பேர் கைதாகினர்.

வின்சென்ட் பால்ராஜ் கூறியதாவது:'நவ., 30க்குள் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த வல்லுனர் குழு அறிக்கை பெறப்படும்' என தமிழக முதல்வர் கூறினார். இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. கிராமங்களில் 1,000 பள்ளிகளை மூடவும், 5,000 ஆசிரியர் பணியிடங்களை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; இதை கைவிட வேண்டும். பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் 79 மையங்களில் 64ல் போராட்டத்தால் பணி நடக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்தும் வரை பணியை புறக்கணிப்போம், என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One