எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

புத்தக வினாக்களால் எளிதாக இருந்தது கணிதம்: 10ம் வகுப்பு மாணவர்கள் கருத்து

Wednesday, April 11, 2018

தேனி: ''புத்தகத்தில் இருந்தே பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டதால், பதில் எழுதுவதற்கு எளிதாக இருந்தது,'' என, 10ம் வகுப்பு கணிதத்தேர்வு எழுதிய தேனிமாணவர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:


சிரமம் இல்லை - அ.சித்திக்ராஜா, அரசு மேல்நிலைப்பள்ளி, அல்லிநகரம், தேனி: 47 வினாக்களில் 15 வினாக்கள் 'விரும்பினால் விடையளிக்கலாம்' என்ற முறையில் கேட்கப்பட்டதால் விடையளிப்பதில் சிரமம் இல்லை. புத்தகத்தில் பயிற்சி, எடுத்துக்காட்டு பகுதியில் உள்ள வினாக்கள் அதிக எண்ணிக்கையில் கேட்கப்பட்டிருந்தன. அதனால் விடையளிக்க எளிதாக இருந்தது. 25வது வினா முக்கோணவியல் பாடத்தில் இருந்து திறன் அடிப்படையில் கேட்கப்பட்டது. முழுமையான கவனத்துடன் படித்தவர்கள் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்துவிடுவர். மற்றவர்களும் தேர்ச்சி பெற்றுவிடலாம். ஆனால், 'சென்டம்' எடுப்பது கடினமே.

எளிது

டி.முகேஷ், காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னமனுார்: புத்தகத்தில் இருந்தே பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டதால் பதில் எழுதுவதற்கு எளிதாகஇருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் சில சிந்தித்து பதில் எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. புரிந்து படித்தவர்கள் எளிதாக பதில் எழுதலாம். கட்டாயமாக பதில் எழுத வேண்டிய வினாக்களும் இவ்வகையிலேயே இருந்தன. மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையில் மாற்றம் கொண்டு வரும் விதமாக வினாக்கள் இருந்ததால், அடுத்த ஆண்டுகளில் மாணவர்களின்கல்வி திறன் மேற்பட வாய்ப்புள்ளது.

புத்தக வினாக்கள்

ஜெ.ரீமாசென் திவ்யா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,பெரியகுளம்: பத்து மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. இதில் முழுமையாக 20 மதிப்பெண் கிடைக்கும். 5 மதிப்பெண்ணில் சார்பு கணக்கு,வர்க்கமூலம் காணல், அணிகள் , நாற்கரத்தின் பரப்பளவு,வெண்படத்தின் பயன்பாடு ஆகிய எதிர்பார்க்கப்பட்ட வினாக்கள் வந்ததால்எளிதாக இருந்தது. ஒருமதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்கள்புத்தகத்தில் உள்ள வினாக்களை அடிப்படையாக கொண்டு'கிரியேட்டிவ்'ஆக கேட்கப்பட்டிருந்ததால், கொஞ்சம் திணற வேண்டியது இருந்தது. அதனால் 'சென்டம்' எடுப்பது எளிதல்ல.எளிதில் வெற்றி பெறலாம்

தென்கரை முத்துப்பிள்ளை, தலைமையாசிரியர், அரசு உயர்நிலை பள்ளி, வேடர்புளியங்குளம், மதுரை: ஒரு மதிப்பெண் பகுதியில் 15 வினாக்களில் 10 மட்டுமே 'புக்பேக்' வினாக்களாக உள்ளன. ஐந்து வினாக்கள் யோசித்து எழுதும் வகையில் உள்ளன. இதுபோல் இரண்டு மதிப்பெண் பகுதியில் எழுத வேண்டிய 10ல் இரண்டு வினாக்கள் மட்டுமே நேரடியாக உள்ளன. எட்டு வினாக்கள் சிந்தித்து விடை எழுதும் வகையில் கேட்கப்பட்டுள்ளன. ஜியாமெட்ரி, கிராப் எளிதாக இருந்தது.ஐந்து மதிப்பெண் பகுதியில் 9ல், ஐந்து வினாக்கள் இதுவரை கேட்காத பகுதியில் இருந்து வந்துள்ளன. குறிப்பாக, இயற்கணிதத்தில் 'நீக்கல் முறையில் தீர்க்க'பகுதியில் இருந்து வினா இடம் பெற்றுள்ளது. தோல்வியை தவிர்க்கும் வகையில், மாணவர் 40 மதிப்பெண் எளிதில் பெறலாம். நன்றாக படிப்பவர் 80 மதிப்பெண் பெறலாம். 20 மதிப்பெண்களுக்கான வினாக்கள் சவாலாக கேட்கப்பட்டுள்ளன. 'சென்டம்' பெற 'செக்' வைக்கப்பட்டுள்ளது.

1 comment

  1. மாணவர்களே....உங்களுக்கு question Easy ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலும் மாணவர்கள் கடினம் என்று கூறினார்கள்....
    கிராமப்புற மாணவர்களின் நிலைமை..?..
    (But you are brilliant students)

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One