எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

புத்தக தினத்தையொட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் 200 பேர் நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து அசத்தல்

Tuesday, April 24, 2018


புத்தக தினத்தையொட்டி இடைமலைப்பட்டிபுதூர் கிளை நூலகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிப்புதூர் மாணவ/ மாணவிகள் 200 பேர் நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர் .........................உறுப்பினர்களுக்கான தொகை .......
ரூபாய் 6000 த்தை சமூக சேவகி திருமதி கே.ஜம்ரூத்
அவர்கள் வழங்கினார்கள் ....இதுவரை 2200உறுப்பினர்களைக் கொண்ட  இந்த கிளை நூலகத்தில் எம்பள்ளி குழந்தைகள் 200 பேர் ஒரே நாளில் உறுப்பினர்களாக சேர்ந்தது, நூலகர் திருஹரி அவர்களுக்கு
மகிழ்வைத்தந்தது ......திருமதி பத்மாவதி , திருமதி செல்வி ,திருமதி
ஜம்ரூத் மற்றும் பள்ளியின்  முன்னாள் கல்விக்குழுத் தலைவர்
அவர்களும் நூலகத்திற்கு வந்திருந்தனர் ...
அறிவுப்பசி மிக்கவர் எல்லா நூல்களையும்  விலை கொடுத்து வாங்குவது  என்பது எளிதான செயல் அல்ல ... பல்துறை அறிவையும்  பெறுவதற்கு நூலகத்து நூல்களே நமக்குப்பெரிதும் துனண நிற்கின்றன என்றார் திருமதி ஜம்ரூத் அவர்கள் ....
கல்விக்குழுத்தலைவர் அவர்கள்” புனித முற்று மக்கள்
புது வாழ்வு வாழ வேண்டின்
புத்தக சாலை வைக்க வேண்டும் நாட்டில் யாண்டும் “.  என்ற பாவேந்தர் அவர்களின் பாடலை நினைவுகூர்ந்தார் ...இறுதியாக குழந்தைகள் தமக்கு விருப்பமான புத்தகங்களை மகிழ்வுடன் எடுத்துச்சென்றனர்
யாதானும் நாடாமால்  ஊராமால் என்னொருவன்
சாத்துனணயும் கல்லாதவாறு
என்ற வள்ளுவர் மொழியை மேற்கொண்டு நல்ல நூல்களை நாளும் கற்று நல்லறிவு பெற்று
கலைச்செல்வங்களை வருங்கால சமுதாயத்திற்கு அளிக்க முன் வருவோமாக....





No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One