எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ரயில்வேயில் 90 ஆயிரம் பணியிடங்களுக்கு முதல்முறையாக 2 கோடியே 37 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

Wednesday, April 25, 2018


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் காலியாக உள்ள 90 ஆயிரம் குரூப் சி மற்றும் குரூப் டி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. மேற்கண்ட பணியிடங்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு முதல்முறையாக 2 கோடியே 37 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதை கண்டு அதிகாரிகள் வியப்படைந்துள்ளனர்.

26 ஆயிரத்து 502 உதவி லோகோ பைலட் குரூப் சி மற்றும் ரயில்வே பாதுகாப்பு பிரிவில் 9 ஆயிரத்து 500 பணியிடங்களுக்கான அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து தண்டவாள பராமரிப்பாளர், டிராக்மேன், கேட்மேன், பாயிண்ட்ஸ்மென், எலக்ட்ரிக்கல், என்ஜினீயரிங், மெக்கானிக்கல், சிக்னல் மற்றும் தொலைதொடர்பு துறை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான 62 ஆயிரத்து 907 "குரூப் டி" அறிவிப்பும் தொடர்ந்து வெளியிட்டது. இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி. அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட ஐடிஐ படித்திருக்க வேண்டும். அல்லது என்.சி.வி.டி. வழங்கிய தேசிய அப்ரண்டிஸ் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள், 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள்  "குரூப் டி" பிரிவுக்கு மார்ச்.12க்குள்ளும், லோகோ பைலட் பணியிடங்களுக்கு மார்ச் 5க்குள்ளும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்து. பின்னர் அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே அனைத்து பிரிவினரும் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கில், ரயில்வே பணிக்கான விண்ணப்பங்களில் பல்வேற்று மாற்றங்களை செய்துள்ள ரயில்வே அமைச்சகம். இதற்கான எழுத்துத் தேர்வை அவரவர்களின் தாய்மொழியிலேயே எதிர்கொள்ளும் வகையில், இதுவரை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அமைந்திருந்த வினாத்தாள், ஹிந்தி, ஆங்கிலம், உருது, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா. கொங்கனி, மலையாளம், மணிபூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாப், தமிழ், தெலுங்கு ஆகிய 15 மொழிகளில் கேள்வித்தாள் அமைந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் 2 ஆண்டுகள் கூடுதலாக தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணியிடங்களுக்கு கை நிறைய சம்பளத்துடன் பல சலுகைகள் கிடைக்கும் என்பதாலும், ரயில்வே பணிக்கு ஒரே நேரத்தில் லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதால் கையில் இருக்கும் இந்த வாய்ப்பை கைநழுவ விட விரும்பதா இளைஞர்கள் சுமார் 1 லட்சம் பணியிடங்களுக்கு இதுவரை 2 கோடியே 37 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளதை கண்டு வியப்படைந்துள்ள அதிகாரிகள், ரயில்வே பணிக்கு ஒரே நேரத்தில் சுமார் லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவதும், 2 கோடியே 37 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்னீசியன் பணி: 26 ஆயிரத்து 502 பணியிடங்களுக்கு 47 லட்சத்து 56 ஆயிரம் பேரும், 62 ஆயிரத்து 907 குரூப்-டி பணியிடங்களுக்கு 1 கோடியே 90 லட்சம் பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.

ரயில்வேயிலேயே மிகப்பெரிய அளவில் கணினியில் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வு. இந்த தேர்வு நடத்தி முடிக்க 2 மாதங்கள் ஆகும். ஆன்லைன் தேர்வால் காகித பயன்பாடு குறைக்கப்பட்டு, 10 லட்சம் மரங்களின் பயன்பாடு மிச்சமாகும். ரயில்வே பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படாது.

மேற்கண்ட தகவல்கள் ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தில் நேர்முகத் தேர்வுகள் எதுவும் இருக்காது. வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய முறைகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

"கணினி அடிப்படையிலான ரயில்வே தேர்வுகளில், வினாக்களுக்கான பதில்கள் அடங்கிய தொகுப்பு திரையில் காட்டப்படும்போது சரியான பதில்களை தேர்வு செய்துவிடலாம். பதில்கள் அடங்கிய தொகுப்பில் எதுவும் சரியான பதில் இல்லை என்றால் தேர்வாளர்கள் தங்களது ஆட்சேபனை தெரிவிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது கணினி அடிப்படையிலான தேர்வுகளில் மட்டுமே சாத்தியமே என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One