எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மெட்ரிக் பள்ளி ஆசிரியரும் விடைத்தாள் திருத்தலாம் -உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

Thursday, April 26, 2018

விடைத்தாள் திருத்தும் பணியில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் விடைத்தாளை திருத்தலாம் என்று  ஐகோர்ட் கிளை தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தேனி மாவட்ட தலைவரான இவர், ஐகோர்ட் மதுரை  கிளையில் தாக்கல் செய்த மனு: அரசுத்தேர்வுத்துறை இயக்குநரகத்தால் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி  மேற்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 18ம் தேதி வெளியான அறிவிப்பில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு  ஆசிரியர்களுடன், கூடுதலாக தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ - இந்தியன் பள்ளி ஆசிரியர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் போதிய அனுபவம் இல்லாதவர்கள். எனவே, தனியார் பள்ளி ஆசிரியர்களை கட்டாயப்படுத்தும் அறிவிப்பை ரத்து  செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில், விடைத்தாள் திருத்தும் பணி  நடந்து வருகிறது. திருத்தும் பணிகளும்  கண்காணிக்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் பாதிக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டது.  இதை பதிவு செய்து  கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதில், மெட்ரிக் பள்ளி ஆசிரியார்கள் விடைத்தாளை திருத்த தடையில்லை என்று  தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One