எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வயதிற்கேற்ப ஓய்வூதியம் மற்றும் பனிக்காலத்திற்கேற்ப பணிக்கொடை பலன் விதிகளில் திருத்தம்

Friday, April 20, 2018

ஓய்வூதியம் பெறுவோரின் வயதுக்கேற்ப, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க, விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, 80 முதல், 84 வயதிற்கு உட்பட்டோருக்கு, அடிப்படை ஓய்வூதியத்தில், 20 சதவீதம்; 85 முதல், 89 வயது வரை உள்ளோருக்கு, 30 சதவீதம்; 90 முதல், 94 வயது வரை உள்ளோருக்கு, 40 சதவீதம் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதே போல், 95 முதல், 99 வயது வரை உள்ளவர்களுக்கு, 50 சதவீதம்; 100 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 100 சதவீதம், உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


அதேபோல், அரசு பணியிலிருக்கும் போது இறந்தவர்களுக்கு வழங்கப்படும், பணிக்கொடை பலன் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் இறந்தால், இரண்டு மடங்கு மாத சம்பளம்; ஓராண்டுக்கு மேல், ஐந்தாண்டுக்குள் இறந்தால், ஆறு மடங்கு மாத சம்பளம் வழங்க வேண்டும் என, திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.அதே போல், ஐந்தாண்டு முதல், 11 ஆண்டுக்குள் இறந்தால், 15 மடங்கு மாத சம்பளம்; 20 ஆண்டுக்கு மேல் இறந்தால், அதிகபட்சமாக, 33 மடங்கு மாத சம்பளம் வழங்க வேண்டும் என, திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One