நாம் ஒரு காரியத்தை செய்ய நினைக்கும்போதே அந்தக் காரியத்தை செய்து முடித்திருந்தால் எப்படி இருக்கும்??.. சூப்பர் ஹீரோ கதைகளிலும் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் மட்டும்தான் இது சாத்தியம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் மேலே சொன்ன விஷயம் உண்மையில் நடக்கூடியதுதான் என தங்கள் கண்டுபிடிப்பை முன் வைத்திருக்கிறது. மாஸாஷுசேட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்( Massachusetts Institute of Technology). அவர்கள் கண்டுபிடித்திருக்கும் ஒரு ஹெட்செட் மூலம்தான் மேலே சொன்ன சூப்பர் ஹீரோ கதை சாத்தியமாகியிருக்கிறது.
இந்த ஹெட்செட்டை நாம் மாட்டிக்கொண்டு மற்றவர்களோடு உரையாடும்போது நமது வாயைக்கூடத் திறக்க தேவையில்லை. நாம் மனதில் நினைப்பதை இந்த ஹெட்செட்டே வெளியே சொல்லிவிடும். அதுபோல கம்யூட்டர், டிவி, ஸ்மார்ட்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தும்போது கூட நாம் ஏதும் செய்யத் தேவையில்லை. அதனைப் பார்க்கும்போது நமது மூளையில் தோன்றும் எண்ணங்களே போதும். உதாரணமாக நமது கம்யூட்டரில் எதையாவது ஒப்பன் செய்ய வேண்டும் என்றாலோ எதையாவது டைப் செய்ய வேண்டும் என்றாலோ நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் மூலம் அந்தச் செயல் நிகழ்ந்துவிடும். இது கம்யூட்டருக்கு மட்டுமல்ல மற்ற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கும் பொருந்தும்.
இன்னும் நம்ப முடியாமல் கூட இருக்கலாம். மாஸாஷுசேட்ஸ் தொழில்நுட்ப நிறுவன ஊடக ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பல ஆண்டுகள் சோதனைக்குப் பிறகு இந்த ஹெட்செட்டின் மாதிரி வடிவத்தை உருவாக்கியுள்ளனர். காதுப்பகுதியின் பின்புறத்தில் இருந்து கன்னம், தாடை வழியாக வாய்க்கு அருகில் வந்து முடிவது போன்று உள்ளது இந்த ஹெட்செட். இந்த ஹெட்செட்டின் பல இடங்களில் எலக்ட்ரோட்கள் பொருத்தப்பட்டுள்ளன. நமது மூளையில் யோசிக்கும்போது உருவாகும் சிக்னல்களை இந்த எலோக்ட்ரோட்கள் மூலம் அறிந்து அதற்கேற்ப மொழியையும் செயல்களையும் இயக்குகிறது இந்த ஹெட்செட். அதுமட்டுமில்லாமல் இணையத்தோடு இணைத்திருப்பதால் பல்வேறுத் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். ஹெட்செட்டின் ஏழு இடங்களில் சென்சார்கள் இருக்கின்றன. ஹெட்செட்டானது எலும்போடு இணைந்து தகவல்களைக் கடத்துகிறது. அதனால் மற்றவர்களோடு உரையாடுவதில் எந்தப் பிரச்சனையும் ஏறப்படவில்லை. முகத்தின் தசைப்பகுதியிலும் எலும்பிலும் இருந்தாலும் இதனால் தோலுக்கோ எலும்புக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நம் மூளையில் யோசிக்கும் அனைத்து விஷயங்களையும் இந்த ஹெட்செட் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுகிறது. இந்த ஹெட்செட்டில் நம்மிடையே திரும்ப பேசும் செயற்கை நுண்ணறிவும் இருப்பதால் நம் செயல்களை இன்னும் எளிதாக்குகிறது. நாம் யோசிக்கும் விஷயங்களை 92% துல்லியமாக உணர்ந்து செயல்படுகிறதாம் இந்த ஹெட்செட். இதுவரை 0 விலிருந்து 9 வரையிலான எண்களையும் 100 வார்த்தைகளையும் படியெடுக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஹெட்செட் இன்னும் மேம்படுத்தப்படும் என்று கூறுகின்றனர் இதனை உருவாக்கிய MIT ஆய்வாளர்கள்.
No comments:
Post a Comment