எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஐந்தாம் வகுப்பு படித்து விட்டு ஆறாம் வகுப்பு படிக்க வேறு பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பிரிவு உபசார விழா நடத்தி அசத்தியுள்ளனர்.

Monday, April 16, 2018


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உருவம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒவ்வோர் ஆண்டும்  5-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்குப் பிரிவு உபசார விழா நடத்துவது வழக்கம். அதன்படி, இந்த வருடம் சித்திரை முதல் நாளான நேற்று (14.04.2018) நடைபெற்றது.  `ஃபேர்வல் டே' கேக், ஏராளமான பரிசு பொருட்கள், பெற்றோர்களுடன் விளையாட்டு, சிக்கன் பிரியாணி என பல்வேறு சிறப்பான நிகழ்வுகளுடன் மாணவர்களை மகிழ்வித்து அசத்தியுள்ளனர் அப்பள்ளி ஆசிரியர்கள்.

இது குறித்து அப்பள்ளி ஆசிரியர் முனியசாமியிடம் பேசினோம்,    ``இந்தப் பள்ளிக்கு நான் வேலைக்கு வந்து ஓர் ஆண்டு ஆகிறது. இங்குள்ள ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் தாங்கள் சேமித்து வைத்த பணத்தை கொண்டு கடைசி நாளில் தங்களது வகுப்பு மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் பிரிவு உபசார விழாவைக் கொண்டாடுவது வழக்கம். நான் வந்த பிறகு தலைமை ஆசிரியரிடம்  நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு  நாமே விழாவைச் சிறப்பாக நடத்தி வழி அனுப்பி வைப்போம் என்றேன்.



அதற்கு ஒப்புதல் அளித்த தலைமை ஆசிரியர் சாந்தி, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அவர்களுக்கு கேக்வெட்டி, பிரியாணி விருந்து அளித்து வழியனுப்பி வைப்போம் என்று கூறி அதற்கான பணத்தையும் என்கையிலே முன் கூட்டியே கொடுத்து விட்டார். மேலும் எங்கள் பள்ளியின் செயல்பாடுகளை முகநூலில் கண்ட திருச்சியைச் சேர்ந்த லதாபாலாஜி, காரைக்குடி நகர லயன்ஸ் செயலர் முருகேஸ்வரி அவரது தோழி வனிதா ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்கள்.

அன்றைக்கு லதா பாலாஜிக்கும், முருகேஸ்வரிக்கும் பிறந்தநாள் என்பதால், தனது சொந்த செலவில் பள்ளியில் படிக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் பென்சில், பேனா எனப் பொருள்களை பிறந்த நாள் பரிசளிப்பு திட்டத்தினையும், மாணவர்களுக்குச் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்க, உண்டியல் வழங்கும் திட்டத்தையும், விளையாட்டு பரிசுகளையும் கொடுத்தனர். பின்னர் தங்களது பிறந்த நாளை லதா, முருகேஸ்வரி எங்கள்  பள்ளி குழந்தைகளோடு கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களும், தங்களுக்குள் கேக் ஊட்டிவிட்டு சந்தோஷம் அடைந்தார்கள். நிறைவாக அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள் புத்தகம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், சென்னை சிறுதுளி சார்பில் வாழ்த்து அட்டைப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினோம். மதியம் அவர்களுக்குப் பிரியாணி விருந்து வழங்கி மகிழ்வித்தோம்" என்றார்.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வந்த லதா பாலாஜி கூறியதாவது,    ``இந்தப் பள்ளி ஆசிரியரையோ, தலைமை ஆசிரியரையோ நேரில் பார்த்தது கிடையாது. பள்ளி மாணவர்களின் செயல்பாடுகளை விகடன் இணைய தளத்தில் செய்திகளாகப் பார்த்தும் இப்பள்ளிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

தலைமையாசிரியர். சாந்தி என்னையே  சிறப்பு விருந்தினராகப் பிரிவு உபசார விழாவிற்கு வரும் படி கேட்டுக் கொண்டார். நான் மட்டும் வந்தால் போதாது என நினைத்து என்னோடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கி வரும் எனது தோழிகள் முருகேஸ்வரி, வனிதாவோடு இன்று இப்பள்ளிக்கு வந்தேன்" என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One