எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கை வெல்லட்டும்.

Tuesday, April 24, 2018


மாநிலத் தலைநகர் சென்னையில் கொளுத்தும் வெயிலிலும்,கொட்டும் பனியிலும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து 2009 க்கு பிறகு பணிக்கு வந்த ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பணிக்கு வந்த ஆசிரியர்களும் போராடிக்கொண்டு உள்ளனர். அவர்களது நியாயமான போராட்டத்தை உதாசீனப்படுத்தாமல் உடனே அழைத்துப் பேசி நியாயமான தீர்வுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவர்கள் அதிக ஊதிய உயர்வு கேட்டுப் போராடவில்லை. ஒரே பணி ஆனால் வேறுபட்ட இரண்டு ஊதிய விகிதம் இருக்கக்கூடாது என்றுதான் ஊதியமுரண்பாடுகளை எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அறவழிப் போராட்டக்களத்தில் இருக்கும் அத்துனைபேரும் ஆகச்சிறந்த அனுபவசாலிகள் அல்ல,ஆனால் எதனையும் போராடிப்பெற முடியும் என்னும் நம்பிக்கை கொண்ட இளம் ஆசிரியப்பெருமக்கள். தனக்கு கீழ் பணியாற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை தீர்க்க வேண்டியதும், அதற்கு வழிமுறைகளைக் காண வேண்டியதும் ஓர் அரசாங்கத்தின் கடமை ஆகும். அறவழிப்போராட்டத்தை மேற்கொண்டுள்ள ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் உடனே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.









சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One