எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, நிலுவைத்தொகை முழு விவரம்

Friday, April 13, 2018

தமிழக அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படி, 5 சதவீதத்தில் இருந்து, 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில், 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும், 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணை நேற்று வெளியிடப் பட்டது. இதன்படி, தற்போதுள்ள, 5 சதவீத அகவிலைப்படி, 7 சதவீதமாக உயர்ந்து உள்ளது.'உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, 2018 ஜன., 1 முதல் அமலுக்கு வருவதால், மூன்று மாதத்திற்கான நிலுவைத்தொகை வழங்கப்படும். 'இந்த அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியர் கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும்' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One