எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியர் அவசியம் நியமனம் செய்ய வேண்டும்..!

Wednesday, April 4, 2018


கணினி இன்றியமையாத சூழலில் :
தொடக்க(1-5) ஓர் கணினி ஆசிரியர். நடுநிலை(6-8)ஓர் கணினி ஆசிரியர்.
உயர்நிலை(9-10),ஓர் கணினி ஆசிரியர்
மேல்நிலைப்(11-12)ஓர் கணினி ஆசிரியர்

என அனைத்து நிலைகளிலும் ஓர் கணினி ஆசிரியர்கள் நியமனம் காலத்தின் கட்டாயம் அல்லவா!!!

தமிழக அரசு!!!
பள்ளிகளுக்கு குறைந்தது ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்...

கணினி ஆசிரியர்களின் முக்கியத்துவம் - பள்ளிக்கு குறைந்தது ஒரு கணினி ஆசிரியரை நியமனம் செய்வது அவசியம்”*

பள்ளிகளில், கணினி சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் அனைத்து துறை நவீன தொழில்நுட்ப வளர்ச்சியானது இன்றைய தனியார் துறைகளின் அதிநவீன தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் ஒப்பிடுகையில் மிக முக்கியமான ஒன்றாகும்.

கணினிகளை எப்படி முறையாக பயன்படுத்துவது, மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்செல், பவர் பாயிண்ட், இணைய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் நிரல்களை கையாள்வது குறித்தும் வலைத்தள வடிவமைப்பு, இணையத்தை முறையாக பயன்படுத்துவது போன்றவற்றினை பி.எட்., பயின்ற கணினி ஆசிரியர்களால் தான் மாணவர்களுக்கு திறம்பட கற்பிக்க முடியும்.

மேலும்,  எவ்வாறு பல்வேறு பயன்பாடுகளைப் (Apps) பயன்படுத்துவது, எவ்வாறு கணினி சாளர இயங்குதள நிரலைப் பயன்படுத்தி மாணவரின் கணினி அறிவை மேம்படுத்துவது, கட்டுரைகள் (அ) கவிதைகள் எழுதும் திறன் கொண்ட மாணவர்களை தமிழ் மொழியில் கணினியில் தட்டச்சு செய்ய பயிற்சி கொடுப்பது போன்ற மேன்மையான கல்விப் பணிகளுக்கு கணினி ஆசிரியர் அவசியம் தேவை. கணினியில் இடம்பெறும் கணிதம் போன்ற வகுப்புகளை மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி பயிற்றுவிக்க  மைக்ரோசாஃப்ட்-எக்செல் போன்ற பிரதான கணினி பயன்பாடுகள் கணினி அறிவியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை மாணவர்களுக்கு எளிதில் புரியும்படியும், தெளிவாகவும் நடத்திட ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி ஆசிரியர் இன்று அவசியமாகும்.

நவீன யுகத்தில் கணினியின் முக்கியப் பங்கு, ஒவ்வொரு துறையிலும் கணினியின் பல்வேறு பயன்கள் என்ன என்பதை கற்பிப்பதற்கும், பள்ளிகளில் கணினி ஆசிரியர் இன்றியமையாத ஒரு இடத்தைப் பெறுகிறார்.

இதை, நடைமுறைப்படுத்த முயற்சித்தேன். ஆனால், நடைமுறைக் கல்வியைக் காட்டிலும் தத்துவார்த்த ரீதியாக கணிப்பொறியினைப் பற்றி தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் கற்க முடிகிறது. இதனை அரசுப்பள்ளியில் முறையாக நடைமுறைத்திபடுத்தினால் அரசுப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். மேலும், பெற்றோர்களுக்கு அரசு பள்ளி மீது உள்ள அவநம்பிக்கையும், அதிருப்தியும் விலகும்; இதனால், அரசுப்பள்ளிகள் சர்வதேச கல்வித்தரத்திற்கு வெகுவாக உயரும்.

தமிழகத்தில் தற்போது அரசு பள்ளி தவிர, தனியார் பள்ளிகள் அனைத்திலும் கணினி அறிவியல் பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு பல கோடி செலவில் இலட்சகணக்கான மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியதே  தவிர அதை முறையாகப் பயன்படுத்தக் கற்றுத்தரவில்லை.

திரு வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One