எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ரயில்வே ஊழியர் குழந்தைகளுக்கு 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகம்

Monday, April 2, 2018


புதுடில்லி : ரயில்வே மற்றும் நிலக்கரி துறையைச் சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள், நல்ல மதிப்பெண் பெறுவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி எழுதிய, 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகத்தை, அத்துறை அமைச்சர், பியுஷ் கோயல் வழங்கி உள்ளார்.
புத்தகத்துடன், அவர் அனுப்பி உள்ள கடித விபரம்: சமீபகாலமாக, தேர்வுகள், மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பிரதமர் மோடி எழுதிய, 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகத்தில், மாணவர்கள், எவ்வாறு தேர்வை கையாள வேண்டும். எப்படி எளிதாக மதிப்பெண் பெறலாம் என்பது குறித்து, தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.இதன் மூலம், மாணவர்களுக்கு பெற்றோரும் உதவ முடியும். இந்த புத்தகம், தேர்வுக்கு மட்டுமல்லாமல், வாழ்க்கையில் முன்னேறவும் பயன்படும். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று சிறந்து விளங்க என் வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One