எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

English Phonetics Video- Unit 13

Monday, April 2, 2018



"சாமி வரம் கொடுத்த மாதிரி தான் phonetic DVD எங்க பள்ளிகூடத்துக்கு"ன்னு நிறைய phone calls, message வர்றதப் பாத்து சந்தோசமா இருக்கு. ஒருத்தர் சொல்லி ஒருத்தர், இதைப் பயன்படுத்த ஆர்வமாய் இருக்கும் சூழ்நிலை சின்னதா ஒரு சந்தோசத்தக் கொடுக்குது.
Phonetic DVD ன்னா என்னான்னு  கேட்கிற சில ஆசிரியர்களைப் பார்க்கும்போது ஆச்சரியமாயிருக்குது.phonetic methodன்னா என்ன, எதுவானா என்னன்னு கடந்து போகும் ஒரு சிலரைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. வேற என்னத்தச் சொல்ல.



சாதி, மதம்,இன வன்முறை எல்லாமே ஆசிரியர்களிடம் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் அவர்கள் ஆசிரியராகவே இருக்கக் கூடாது என்று சொன்னார்  பேரறிஞர்......சரி விடுங்க.ஒரு flowல வந்திருச்சு. நான் தான் சொன்னேன்.

ஒரு முஸ்லிம் பெண் தோழமையாசிரியர் குழந்தைகளுக்காகத் தன் திறமையை, நேரத்தை, பணத்தைச் செலவிட முன்வரும் போது எத்தனை தடைகள் சுவர் எழுப்பி இருக்கும்? எத்தனை சொற்கள் கல் எறிந்திருக்கும்?



Unit 13 வகுப்பெடுத்த சாயிதா டீச்சர் அரசுப் பள்ளிகளின் ஈடேற்றத்திற்காய் மனமுவந்து தன்னை அர்ப்பணித்த தலைமை ஆசிரியர்.

First Rank,Last Bench students எல்லோருக்கும் நன்றாக நினைவிருக்கும்.Average students பெயர் எப்போதும் சரிவர நினைவிருக்காது. சாய்தா டீச்சர் அவர்களும் இடை நிலை ரகம்.
எதுவும் பேசமாட்டார். எப்போதும் பேசமாட்டார்.
ஆழ்கடலின் அமைதியாய் சலனமற்ற முகம்.அதிராத புன்னகை. நாங்கள் சாப்பிடும் வரை காத்திருந்து எல்லோரும் சாப்பிட்ட பிறகு சாப்பிடும் இன்னொரு அம்மா.

பேசமாட்டாரா தவிர சொன்ன வேலையை, திறம்பட, குறித்த நேரத்திற்குள் செய்து முடித்து விடுவார்.
Rhymes எடுப்பதற்கான வேலைகளை சஞ்சீவி மலையாய் சுமந்த அனுமன் இவர்.

ஒரு இடைநிலையாசிரியர் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும்போது வரும் பயம்,கூச்சம்,தயக்கம், நான்கு பேருக்கு முன்னால் தவறாகச் சொன்னால் கேலி பண்ணுவார்களே என்ற எண்ணம் போன்றவற்றை உடைத்து புதிய பிரசுரமாய் Unit 13- ல் அவதரித்தார்.

இவர் பேசவில்லை என்றால் என்ன?... இவரை வாழ்த்தி நாம் பேசுவோம்.

Video


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One