எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்-லைன் வழி மாணவர் சேர்க்கைக்கு தடை தேவை: உயர் நீதிமன்றத்தில் திமுக மனுதாக்கல்

Tuesday, May 1, 2018

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்-லைன் மூலமாக மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுகஎம்எல்ஏ சார்பில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மாணவரணிச் செயலாளரும், காஞ்சிபுரம் எம்எல்ஏ.வுமான சிவிஎன்பி. எழிலரசன் தாக்கல்செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த மார்ச் 26-ம் தேதியுடன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து விட்டது.நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென கடந்த 2017 நவம்பர் 8-ம் தேதியன்று உயர்கல்வித் துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தல், சான்றிதழ்களை சரிபார்த்தல், இடங்கள் ஒதுக்கீடு என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத னால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, இந்த விதியை மாற்றி பல்கலைக்கழகத்திலிருந்து விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் ‘ஆப்-லைன்’ முறையையும் அனுமதிக்க வேண்டும். மேலும், ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் பங்கேற்க போதுமான கணினி மற்றும் இணையதள தெளிவு இல்லாத கிராமப்புற மற்றும் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் இதனால் சிரமம் அடைவதுடன் தங்களுக்கான சேர்க்கை வாய்ப்பை இழக்கவும் நேரிடும்.

இந்தாண்டு பொறியியல் சேர்க்கைக்கு ஆன்-லைன்மூலமாக மட்டுமின்றி ஆப்-லைன் சேர்க்கைக்கும் விண்ணப்பங்களை அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.எனவே, ஆன்-லைன் மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, ஆன்-லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.இந்த மனு, கோடை விடு முறைகால சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One