எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தலைமைச் செயலக பணியாளர்கள், ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்களின் ஊதிய விகிதம்: அமைச்சரின் கருத்து தவறானது: தலைமைச் செயலக சங்கம் விளக்கம்

Wednesday, May 9, 2018

பணியாளர்களின் ஊதிய விகிதம் தொடர்பாக, அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்ட செய்தி உண்மைக்கு மாறானது என்று தலைமைச் செயலக சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து சங்க நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பணிபுரியும் தலைமைச் செயலக பணியாளர்கள், ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்களின் ஊதியப் பட்டியலை கடந்த 7-ஆம் தேதியன்று அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஊதியமானது, சராசரி ஊதியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சராசரி ஊதியத்தை ஒரு பணியாளர் அடைய வேண்டுமெனில் அவர் ஒரே பதவியில் சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே பெற முடியும். எனவே, தலைமைச் செயலக பணியாளர்களுக்கான உண்மையான ஊதியத்துக்கும், அமைச்சர் குறிப்பிட்ட ஊதியத்துக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது.
குறிப்பாக, உதவியாளர் நிலையில் பணியாற்றும் ஒருவருக்கு அகவிலைப்படியுடன் சேர்த்து ரூ.21,400 மாத ஊதியம் அளிக்கப்படுகிறது. ஆனால், அமைச்சரின் அறிவிப்பில் ரூ.47,873 எனத் தெரிவித்துள்ளார்.
இதே போன்று இதர பணியாளர் நிலைகளிலும் ஊதியத்தை இரண்டு மடங்கு வரை உயர்த்தித் தெரிவித்துள்ளார் என தலைமைச் செயலக சங்கத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One