எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

புதிய பாடத்திட்டம் நாளை வெளியீடு: செங்கோட்டையன்

Tuesday, May 1, 2018

''ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான, புதிய பாடதிட்டம், மே, 2ல் முதல்வர் கையால் வெளியிடப்படும்,''என, கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே பா.வெள்ளாளபாளையத்தில், 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்து பேசியதாவது:உள்ளாட்சி மற்றும் வனத்துறை மூலமாக, இரண்டு கோடி மரங்களை நடுவதற்கு, தமிழக அரசு நடவடிக்கைமேற்கொண்டுள்ளது.பள்ளிக்கல்வித் துறை மூலமும், மரங்கள் நடுவதற்கான பணி நடக்கிறது. மாணவர்கள் அத்தனைபேருக்கும், அவர்களது வீடு, தோட்டம் மற்றும் பொது இடங்களில் மரம் வளர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.பரிசீலனைஓராண்டு காலம், அந்த மரங்களை வைத்து பராமரித்தால், அந்த மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க, அரசு பரிசீலித்து கொண்டிருக்கிறது.மதிப்பெண் தந்தால் தான், ஓராண்டு காலம், அந்த மரங்களை மாணவர்கள் பராமரிக்க முடியும். இந்த பணிகளுக்கான கோப்புகள் நகர்ந்துகொண்டிருக்கின்றன.

முதல்வரின் ஒப்புதல் பெற்ற பின், அந்த திட்டம் நிறைவேற்றப்படும்.ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு களுக்கான, புதிய பாடதிட்டம், மே, 2ல் முதல்வர் கையால் வெளியிடப்படும்.மற்ற வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றி அமைத்த பின், 'ஸ்கிள் லேப்' எனும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.தேர்வு முடிவுகள்மேல்நிலை வகுப்புகளுக்கு, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கிறது. எந்த தேதியில் அரசு அறிவித்துள்ளதோ, அந்த குறிப்பிட்ட தேதியில், எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One