தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள, ஒன்பதுபள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், எட்டு பள்ளிகள், கேரளாவில் ஒரு பள்ளி என,தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில், மொத்தம் ஒன்பது பள்ளிகள் உள்ளன. இவற்றில், 5,000த்திற்கும் மேற்பட்டமாணவர்கள் படித்து வருகின்றனர். வரும் கல்வியாண்டில், மாணவர்களை சேர்க்க வேண்டாம் என, இந்த பள்ளிகளின் நிர்வாகத்திற்கு, தெற்கு ரயில்வே கடிதம் அனுப்பியுள்ளது.மேலும், பள்ளிகளில், தற்போது பயின்று வரும் மாணவர்களை, 2019 - 20ம் கல்வியாண்டில், வேறு பள்ளிகளுக்கு மாற்ற, பெற்றோர் ஆசிரியர் சங்கம் வழியாக, நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'ரயில்வேயில் உள்ள குறைகளை களைவதற்காக, விவேக் தேவ்ராய் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பரிந்துரையின்படி, மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என, தெற்கு ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment