திருப்பூர்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், 'ஐ.ஏ.எஸ்., ஆவதே லட்சியம்' எனக் கூறிய மாணவி, அதேபோல், சாதித்து காட்டினார்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அருகே, தேவனம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி; மில் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. நீலகண்டன் என்ற மகனும், நித்யா என்ற மகளும் உள்ளனர்.இதில், நித்யா, 34. கடந்த, 2013ல், ஐ.ஆர்.எஸ்., தேர்வெழுதி வெற்றி பெற்று, வருமானவரித் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
'தினமலர்'
இவர், திருப்பூர், பாளையக்காடு முருகப்ப செட்டியார் மெட்ரிக் பள்ளியில், 1998 - 99ம் ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 468 மதிப்பெண்பெற்றார்.அப்போது, 'தினமலர்' திருப்பூர் பகுதியில் வெளியான, 'சாதனை மொட்டுகள்' பகுதிக்கு, அவர் அளித்த பேட்டியில், 'கல்வியில் முதலிடம் பெற்று ஐ.ஏ.எஸ்., ஆவது என்லட்சியம்' என்றார்.நம்பிக்கையை சிறிதும் தளரவிடாத அவர், பிளஸ் 2 தேர்வில், 1,200க்கு, 1,085 மதிப்பெண்பெற்றார்.
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரியில், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார். அதன்பின், ஐதராபாதில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இருப்பினும், அவரது ஐ.ஏ.எஸ்., கனவு, அவரது துாக்கத்தை கலைத்து கொண்டே இருக்க, ஐதராபாதில், சிறப்புப் பயிற்சி பெற்று, ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதினார். நான்காவது முயற்சியில், அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.
223வது, 'ரேங்க்'
நித்யா கூறிய தாவது:இன்ஜி., படிப்பு முடித்து, வேலை செய்து கொண்டே, ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதினேன். நான்காவது முயற்சியில், இந்திய அளவில், 223வது, 'ரேங்க்' பெற்று தேர்ச்சி பெற்றேன்.ஒன்றரை வயது கைக்குழந்தையை கவனித்துக் கொண்டே தேர்வெழுதி தேர்ச்சி பெற்றேன். கிராமப்புற மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், எனது பணி அமையும்.இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment