எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இந்தாண்டு முதல் 'பிளே ஸ்கூல்' 'LKG,UKG' துவங்கப்படுகிறது??

Saturday, May 19, 2018

மதுரையில் 40 இடங்களில் இந்தாண்டு மாநகராட்சி 'பிளே ஸ்கூல்' துவங்கப்படுகிறது.

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்த நிலையில், ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டது. இதனால் மாணவர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் உயர்ந்தது. தற்போது 6 - 8ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வியில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர்.இதன் தொடர்ச்சியாக நடுநிலைப்பள்ளிகள் மற்றும் ஆரம்ப பள்ளிகளில் இந்தாண்டு முதல் 'பிளே ஸ்கூல்' துவங்கப்படுகிறது.

இதில் 3 - 5 வயது வரை மாணவர்கள் சேர்க்கை துவங்கி உள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,''தற்போது வரை 1,000 மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ளது. தொடர்ந்து சேர்க்கை நடக்கிறது. இக்கல்வி முழுவதும் இலவசம். குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு வாகன வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது,'' என்றனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One