டெல்லி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேருவதற்கு இன்று நுழைவுத் தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து 1,97,751 மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுதுகின்றனர். இன்று நடைபெற்று வரும் நுழைவுத்தேர்வை 130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் மாணவர்கள் எழுதி வருகின்றனர். 200 இடங்களுக்கான 200 இடங்களுக்கான இந்த நுழைவுத்தேர்வில், 150 இடங்கள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மருக்கும், 50 இடங்கள் காரைக்கால் கிளைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுவையில் உள்ள 7 மையங்களில் 1,925 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். காலை 1,01,321 மாணவர்களும், மதியம் 96,424 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுகள் காலை 10.00 மணி முதல் - 12.30 வரையும், மதியம் 3.00 - 5.30 மணி வரையும் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு மேல் மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தாமதமாக வரும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும். மாணவர்கள் தேர்வு நுழைவு சீட்டு மற்றும் ஆதார்கார்டு, இ-ஆதார்கார்டு, பாஸ்போர்ட் (அசல் மற்றும் நகல்) ஆகிய அடையாள அட்டை கொண்டுவர கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. தேர்வு நுழைவு சீட்டு மற்றும் அடையாள அட்டை கொண்டுவர தவறிய மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த தேர்வு முடிவுகள் ஜுன் 20-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் நடைபெற தாகவும், வகுப்புகள் ஜுலை 4-ம் தேதியிலிருந்து துவங்கவுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment