தமிழகத்தில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கான சம்பளம் 18 சதவீதத்தில் இருந்து 24 சவீதம் வரை உயர உள்ளது. இது எம்எல்ஏக்களின் சம்பளத்தைவிட கூடுதலாக இருக்கும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுக்களுக்கு பிறகு கல்லூரி மற்றும் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. குறிப்பாக 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பேராசிரியர்கள் சம்பளத்தில் திருத்தம் செய்யவும், உயர்த்தி வழங்கவும் கூடிய ஆணையை அரசு வழங்க உள்ளது. அப்படி திருத்தம் செய்யப்படும் சம்பளமானது தற்போது பேராசிரியர்கள் பெறும் சம்பளத்தில் இருந்து 18 முதல் 24 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
kaninikkalvi.blogspot.com
புதிய ஊதிய விகிதத்தின்படி பேராசிரியர்கள் அடிப்படை சம்பளமாக அதிகபட்சம் ₹1 லட்சத்து 40 ஆயிரம் மாதம் ஒன்றுக்கு பெறுவார்கள். இது தமிழக எம்எல்ஏக்களின் சம்பளத்துடன் ஒப்பிடும் போது 30 சதவீதம் அதிகம். கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் புதியதாக பணியில் சேரும் உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 55 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரமாக சம்பளம் உயரும்.
ஊதிய உயர்வு தொடர்பான சம்பள உயர்வு என்பது நாடு முழுவதும் கடந்த 2016ம் ஜனவரி 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2017 அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி அரசு ஆசிரியர்கள் 21 மாத கால நிலுவைத் தொகையை இழக்க நேரிடும். திருத்திய சம்பள அட்டவணைப்படி உதவிப் பேராசிரியர்களின் அடிப்படை சம்பளம் 57 ஆயிரத்து 700 ல் இருந்து 79 ஆயிரத்து 800 ஆகவும், இணைப் பேராசிரியர்கள் 1 லட்சத்து 30 ஆயிரம் அடிப்படை சம்பளமாக பெறுவார்கள். பேராசிரியர்கள் ₹1 லட்சத்து 40 ஆயிரம் முதல் 1 லட்சத்து 80 ஆயிரமாக இருக்கும். அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 7 சதவீதம் இருக்கும் போது மற்ற உதவித் தொகைகள் வேறுபட வாய்ப்புள்ளது. திருத்திய சம்பளம் தொடர்பான உத்தரவு வெளியான பிறகுதான் முழுமையான பணப்பயன்கள் எவ்வளவு கிடைக்கும் என்று சொல்ல முடியும் என்று பேராசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது

No comments:
Post a Comment