அன்னவாசல்,ஜூன்.1: தமிழக அரசு பெற்றோரின் பொருளாதார சுமையைக் குறைக்கவே மாணவர்களுக்கு 14 வகையான பொருட்களைக் கொடுத்து சிறப்பான உயர்கல்வியை ஏழை மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று வட்டார கல்வி அலுவலர் அரு.பொன்னழகு கூறினார்.. அன்னவாசல் ஒன்றியத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள 142 பள்ளிகளில் படிக்கும் 11,246 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே அரசின் விலையில்லா பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இதற்கான தொடக்கவிழா புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் திருவேங்கைவாசல் ஊராட்சி உய்யக்குடிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அன்னவாசல் வட்டார கல்வி அலுவலர் சீனி.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது...
மாணவ- மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பொருட்களை வழங்கியும்,புதிய பள்ளியினை தொடங்கி வைத்தும் அன்னவாசல் வட்டார கல்வி அலுவலர் அரு.பொன்னழகு பேசியதாவது: பெற்றோர்கள் மிகுந்த கஷ்டப்பட்டு மாணவர்களை படிக்க வைத்த காலம் போய் பெற்றோர்களின் சுமையை குறைத்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது..மாணவர்களின் கடமை படிக்க வேண்டியது மட்டும் தான்..படித்து சிறப்பான மதிப்பெண் பெற்றால் எந்த உயர் படிப்பையும் தொடர அரசு உதவி செய்யும்.. படிப்பிற்கு பணம் தடையாக இருக்காது..பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது..அரசின் நலத்திட்டங்களை பெறும் மாணவர்கள் நாட்டிற்கும் ,சமுதாயத்திற்கும் பிரயோஜனமுள்ள குடிமக்களாக திகழ வேண்டும்..எனவே நாட்டின் வளர்ச்சிக்கு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.. விழாவிற்கு அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராசு முன்னிலை வகித்தார்.. முன்னதாக இந்தாண்டு புதியதாக தொடங்கப்பட்டுள்ள உய்யக்குடிபட்டி தொடக்கப்பள்ளியின் தொடக்க விழாவும், அதன் பிறகு புதிய மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது..விழாவில் முக்கிய பிரமுகர்கள் சின்னத்தம்பி,ராமசாமி,சாம்பசிவம்,பழனிச்சாமி,பழனிவேலு,சேகர்,மாங்குடி முன்னாள் தலைமை ஆசிரியர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.மாராயப்பட்டி தலைமை ஆசிரியர் அண்ணாமலை நன்றி கூறினார்..விழாவில் ஏராளமான ஊர்ப்பொதுமக்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர். இவண்.கு.முனியசாமி M.A,B.Ed,ஆசிரியர்..உருவம்பட்டி.அன்னவாசல் ஒன்றியம்..
எல்லாம் சரிதான் கொடுகிறதக் கொஞ்சம்
ReplyDeleteதரமானதாக குடுத்தா நல்லாயிருக்கும். அதக் கவனதுல எடுத்தா உண்மையில்
வட்டாரம் வட்டாரம்தான்.
கொடுப்பதெல்லாம் கண்துடைப்பு
ReplyDelete