எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை செல்போன் மூலமாகவே எளிமையாக இணைக்கலாம்!

Saturday, June 23, 2018

இன்டர்நெட் வசதி இல்லாமலேயே, குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாக பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வசதியை வருமான வரித் துறை ஏற்படுத்தி வைத்துள்ளது.
 வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது. அந்த காலக்கெடு முடிய இன்னும் இன்றுடன் சேர்த்தே வெறும் 8 நாட்கள் மட்டுமே உள்ளன.
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறைகளை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் வருமான வரித் துறை செய்து கொடுத்தது.
அதன்படி, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கென பிரத்யேக இணைப்பை வருமான வரித் துறை உருவாக்கியது.
அந்த இணைப்பில் வருமான வரி செலுத்துவோர் சென்று, தங்கள் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் பதிவிட்டாலே போதுமானது. சிறிது நேரத்தில் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டது உறுதி செய்யப்படும். ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை ஆகியவற்றில் உள்ள சிறிய பெயர் மாற்றங்களும் இதில் தாமாக சரிசெய்யப்பட்டு விடும்.
குறுஞ்செய்தி வசதி: இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வசதியை மேலும் எளிமையாக்கும் விதமாக, குறுஞ்செய்தி வசதியை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, செல்லிடப்பேசியில்UIDPAN என்று டைப் செய்து இடைவேளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணையும், அதன் பிறகு மீண்டும் இடைவேளி விட்டு 10 இலக்க பான் எண்ணையும் டைப் செய்ய வேண்டும். இந்தத் தகவலை 567678 அல்லது 56161 என்ற எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு குறுஞ்செய்தியை அனுப்பினாலே பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.
பான் அட்டையிலும், ஆதார் அட்டையிலும் ஒரே மாதிரியான பெயர் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்தக் குறுஞ்செய்தி வசதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One