தமிழகத்தை சேர்ந்த இளம் மாணவர்கள் சிறய அளவிலான ரோவர் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் 22-ம் தேதியன்று 64 கிராம் எடையுள்ள கலாம் சாட்டிலைட் விண்ணில் ஏவப்பட்டது.
அதன் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஒன்று கூடிய மாணவர்கள் இந்த வருடம் அடுத்த விண்கலத்தை அனுப்ப தயாராகியுள்ளனர்.
சந்திரனுக்கு அனுப்பப்படும் இந்த விண்கலம் அங்குள்ள மண்ணின் தரம் மற்றும் ஈர்ப்பு விசைக் குறித்து அறியவும், மனிதர்கள் அங்கு வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப் பயன்படும் என்றும் கூறியுள்ளார்
கலாம் சாட்டிலைட் ஆய்வில் ஈடுப்பட்டு அதை வெற்றிகரமாக முடித்த பள்ளப்பட்டியை சேர்ந்த ரிபாத்.
இதுபோன்ற ஆராய்ச்சியில் ஈடுப்படும் தமிழக மாணவர்களுக்கு தேவையான தகவல்களை இணையம் மூலம் வழங்க தயாராக இருப்பதாக ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனர் ஸ்ரீமதி கூறியுள்ளார்.
விண்கலம் அனுப்ப தேவையான பணிகளை ராஜஸ்தான் அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக கூறிய ஸ்ரீமதி தமிழகத்தில் 'ஸ்பேஸ் ரிசர்ச் பாத்' அமைத்து கொடுத்தால் இதேபோல் பல மாணவர்களை உருவாக்க முடியும் என்றார்.
மேலும் இதுபோல் ஆராய்ச்சிகளை தமிழக அரசு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது
No comments:
Post a Comment