`நீ உன் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்த்துவிடு. உன்னிடம் பணமில்லை என்றாலும் பரவாயில்லை. அரசே தனியார் பள்ளிகளுக்குப் பணத்தைச் செலுத்தும்" என்று அரசு கூறுவது ஏற்புடையதா" என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் கூறுகையில், "தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை சமூகத்தில் நலிவுற்ற ஏழை எளிய குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமாம்.
அதனால், அரசுப் பள்ளிக்கு வர வேண்டியவர்களைத் தனியார் பள்ளியில் கொண்டுபோய் சேர்க்கணும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், புதிய மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதற்கான காரணம் கூற வேண்டுமாம். இப்படியும் ஓர் ஆணை.
தனியார் பள்ளியில் அரசே சேர்க்க ஆணையிடுகிறதெனில் விடுமுறை நாள்களில் மாணவர்களைச் சேர்க்க வீடுவீடாகச் சென்று அரசு பள்ளியில் சேர்க்க சொல்லி சேர்க்கை பேரணிகள், பிரசாரங்கள் செய்வதெல்லாம் வீணா?
தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்கினாலும் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாகப் பணியாற்றினாலும் கற்பித்தாலும், கற்றல் கற்பித்தல் சண்முகநாதன்பணிகளுக்குச் சொந்த பணத்தைப் போட்டு சில வசதிகளை அரசை எதிர்பாராமல் தாமே உருவாக்கிக் கொடுத்தாலும் தனியார் பள்ளிகளின் மீதுள்ள மோகத்தால் பணமுள்ளவர்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் தனியார் பள்ளிகளில் பணம் செலுத்த முடியாத பணமில்லாதவர்கள் வசதியற்றவர்கள்தான் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்களையும் இந்த அரசு தடுக்கின்ற வகையில், "நீ உன் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்த்துவிடு. உன்னிடம் பணமில்லை என்றாலும் பரவாயில்லை. அரசே தனியார் பள்ளிகளுக்கு பணத்தைச் செலுத்தும்" என்று கூறுவது ஏற்புடையதா, எங்கேயாவது இப்படி நடக்குமா?
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகளால், பள்ளிக் கல்வித்துறை அதிரடி காட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும், அவற்றில் முக்கிய அறிவிப்புகள் பலவும் அறிவிப்பு வடிவிலேயே இருப்பதுதான் கவலை அளிக்கிறது. Fees alligation against private schools
தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஓர் ஆணை. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், புதிதாக மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால் அதற்கான காரணம் கேட்கப்படும் என்று ஓர் ஆணை. இரண்டு ஆணைகளையும் போடுவதும் ஒரே நபர். தனியார் பள்ளிகளில் 25% மாணவர்களுக்கு அரசு செலுத்தும் பணத்தை அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்குப் பயன்படுத்துமேயானால் அரசுப் பள்ளி நலன் பெறுமே.
தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை அரசுப் பள்ளிகளில் இந்த அரசால் ஏற்படுத்தி தர இயலாதா. பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பல தனியார் பள்ளிகளில் போதிய வசதிகளே இல்லாத பள்ளி. அப்பள்ளிகளைவிட கற்றல் கற்பித்தலில், நம் பள்ளி 100% உயர்வானது. நம் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் போதிய கல்வி தகுதியோடு உள்ளவர்கள். கற்றல் கற்பித்தலில் சிறந்தவர்கள்.
ஆனால், தனியார் பள்ளிகளில் அப்படியா உள்ளது. தனியார் பள்ளிகள் சிறந்த பள்ளிகள் என்பதற்கான அளவுகோல் எது? அரசுப் பள்ளிகளைப்போல் தனியார் பள்ளிகளில் அடைவுத்திறன் மதிப்பீட்டு தேர்வுகள் உண்டா, வாசித்தல் திறன் ஆய்வு உண்டா, அரசுப் பள்ளிகளில் பராமரிக்கும் ஏகப்பட்ட பதிவேடுகள் அங்கு உண்டா, ABL SALM ALM முறைகள் உண்டா, இங்கிருக்கும் நடைமுறைகள் அங்கு எதுவும் இல்லாதபோது அரசுப் பள்ளியையும் தனியார் பள்ளியையும் ஒப்பிடுவது எவ்வாறு?

நல்ல கேள்வி.பதில் யார் சொல்வது?
ReplyDelete//அப்பள்ளிகளைவிட கற்றல் கற்பித்தலில், நம் பள்ளி 100% உயர்வானது. நம் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் போதிய கல்வி தகுதியோடு உள்ளவர்கள். கற்றல் கற்பித்தலில் சிறந்தவர்கள்.//
ReplyDeleteபிறகு எதற்கு நம் போன்ற ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் நம் பிள்ளைகளை சேர்க்கிறோம்?🤔
சபாஷ் சரியான கேள்வி சரியான பார்வை மிகச்சரியான பாதை....நம்மிலும் ஒருவர் நியாயமான பதிவை பதிந்தமை
Deleteமிகவும் சிறப்பு.. வாழ்க பல்லாண்டு
San Raa .

மேல்நிலைகல்வி வரை அனைத்து பள்ளிகளையும் அரசுடைமை ஆக்குங்கள்
ReplyDeleteFirst we teachers should admit our children to Govt school...unless all the agitations are meaningless
ReplyDeleteYes.Now English medium is also available in many schools.So why don't we go for Govt schools?
ReplyDeleteநல்ல கேள்வி. கேள்விக்கென்ன பதில்?
ReplyDeleteஅரசுப்பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வி.மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி.இரண்டையும் ஒப்பிடுவதே தவறு.பொதுமக்கள் ஆங்கிலவழிக் கல்வியை விரும்பியே மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.எனவே அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வி பயிற்றுவித்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை உயரும்.
ReplyDelete