எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

CBSE - கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்க புதிய நடைமுறை

Thursday, June 28, 2018

கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்கும் வகையில் கேள்வித் தாள்களை மின் அஞ்சல் மூலமாக தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

 அண்மையில் நடைபெற்ற சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் 10ம் வகுப்பு மறுதேர்வுகள் அடுத்த மாதம் 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்கும் வகையில் மின் அஞ்சல் மூலமாக கேள்வித் தாள்களை அனுப்பி வைக்கும் முறையை சோதனை செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இவை 1000 மாணவர்களுக்கு குறைவாக தேர்வு எழுதும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தேர்வு கூட கண்காணிப்பாளர் பாஸ்வர்ட் மூலமாக ஒரு பிரிண்ட் எடுத்து பின்பு மாணவர்களுளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஜெராக்ஸ் எடுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஒவ்வோரு தேர்வு மையத்திற்கும் சிபிஎஸ்இ சார்பில் ஒரு மேற்பார்வையாளர் இருப்பார். மேலும் ஒவ்வொரு  மையத்திற்கு தனிப்பட்ட கடவுசொல் வழங்கப்படும். இந்த சோதனையில் எதிர்பார்த்த விளைவு வந்ததால், அடுத்த வருடம் நடைபெறும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளின் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One