நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நேற்று உற்சாக மாக கொண்டாடினர். பல இடங் களில் நலத்திட்ட உதவிகள், ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. பிறந்தநாளை முன்னிட்டு, சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களை சூர்யா சந்தித்தார். அப்போது அவர், ‘‘புதுப் புது அனுபவங்களை நிறைய கற்றுக்கொண்டே இருங் கள். செய்யும் வேலையில் நாம்தான் பெஸ்ட்டா இருக் கணும்னு மனசுல ஆழமா நினைங்க. நல்ல பழக்கங்களை கடைபிடிங்க. மற்ற எல்லாத்தையும்விட முதல்ல குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம்’’ என்றார்.
அதேபோல, கல்வி சேவை யிலும் தனித்த ஈடுபாடு காட்டி வரும் சூர்யா, ‘‘பள்ளி மாணவர் களுக்கு படிப்புக்கு இணையாக, சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை யும் புரியவைக்க வேண்டும்’’ என்று பல நிகழ்ச்சிகளில் கூறிவந்தார்.
இந்நிலையில், அந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு, தற் போது மாவட்டத்துக்கு குறைந்தபட் சம் 10 பள்ளிகள் என தமிழகம் முழு வதும் 400 அரசு பள்ளிகளை தேர்வு செய்து, அங்குள்ள கழிப்பறை களை புதுப்பிக்க முடிவு செய்துள்ளார். விரைவில் இப்பணி கள் தொடங்க உள்ளன.
இதை கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கழிப் பறைகளை புதுப்பிப்பது மட்டுமின்றி, தொடர்ந்து அவற்றை சுகாதாரமாக பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன
Superb
ReplyDeletegGOOD PLAN SURYA IT IS VERY USFUL FOR VILLAGE STUDENTS.ANY CHANCE IN MY SCHOOL , PUPS PALACODE AGRAHARAM.DHARMAPURI
ReplyDeleteSuper Surya very good plan
ReplyDeleteSuper Surya very good plan
ReplyDeleteWe want your help sir Minjur panchayat union primary school Ramanathapuram
ReplyDeleteஅருமை சூர்யா அவர்களே அரசு பள்ளிகளுக்கான நல்ல திட்டம்
ReplyDeleteதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம அரசுபெண்கள் மேல்நிலைப்பபள்ளி யில் கழிப்பறை வசதி குறைவாக உள்ளது உங்கள் பணி எங்கள் பள்ளிக்கும் தேவை.
ReplyDeleteVanakkam sir.your thinking is superb.please consider my school for toilet construction.address.P U M School,Neivathali,Aranthangi Union,Pudukkottai Dt.pin 614616.
ReplyDelete