அரசு பள்ளி ஆசிரியராக வேண்டும் என்றால் இனி இரு தேர்வுகளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் நிரப்பி வருகின்றனர். இந்நிலையில் வெயிட்டேஜ் மதிப்பெண்களை கொண்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவதால் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இதையடுத்து இரு தேர்வுகளை நடத்த மாநில பொதுப் பள்ளி கல்வி வாரிய கூட்டத்தின் பரிந்துரை செய்தது. இதையடுத்து அந்த பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வை தனியாகவும் நியமனத்துக்கான போட்டி தேர்வையும் தனித்தனியாக நடத்துவது என்று அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையை தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டது. போட்டி தேர்வு எழுதுவதற்கு தகுதி தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment