எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை

Monday, July 23, 2018

தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் திங்கள்கிழமை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2019 ஜனவரி 1 -ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
 இதையடுத்து, சில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அலுவலகங்கள் போன்றவை தானாகவே முன்வந்து தங்களது வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை விதித்துள்ளன. இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறையின் முக்கியத் துறைகளான பொது சுகாதாரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் ஆகியவற்றின்கீழ் இயங்கும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அலுவலகங்கள் என அனைத்திலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 இரண்டு துறைகளைத் தொடர்ந்து மருத்துவக் கல்வி இயக்ககத்தின்கீழ் இயங்கும் மருத்துவமனைகளிலும் இந்தத் தடை அமல்படுத்தப்பட உள்ளது.
 தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளும், சென்னை பாரிமுனையில் அரசு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இக்கல்லூரிகள் அனைத்திலும் ஜூலை 23 -ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள், காகிதக் கோப்பைகள், தட்டுகள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 இதற்கான சுற்றறிக்கை அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One