எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் எண்ணம் இல்லை'

Thursday, July 19, 2018

'சமூக வலைதளைங்களில்
பதிவாகும் தகவல்களை கட்டுப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை' என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர், எஸ்.எஸ். அலுவாலியா தெரிவித்தார்.'வாட்ஸ் ஆப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், கலவரத்தை துாண்டுதல், பயங்கரவாதத்தை பரப்புவது போன்ற, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய தகவல்கள் அதிகளவில் பகிரப்படுகின்றன. புதிய அமைப்பு



இந்நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை சேகரித்து ஆய்வு செய்யவும், அவற்றை கண்காணிக்கவும் 'சமூக வலைதள தகவல் தொடர்பு மையம்' என்ற புதிய அமைப்பை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. பேச்சு சுதந்திரம் இது தொடர்பாக, லோக்சபாவில் நேற்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர், எஸ்.எஸ்.அலுவாலியா அளித்த பதில்: மக்களின் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தையும், ரகசியங்களையும் பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பதியப்படும் கருத்து களை, கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ அரசு விரும்பவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடவடிக்கை தேசத்துக்கு விரோதமாக வெளியாகும் தகவல்களை, பாதுகாப்பு அமைப்புகள் ஆய்வு செய்து, சட்டப்படி விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்.
சமூக வலைதளங்கள், இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டன. தங்கள் கருத்துகளை, எண்ணங்களை தெரிவிக்க, இதை ஒரு சாதனமாக, மக்கள் பயன்படுத்துகின்றனர்; சிலர், அதை தவறாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One