ஆங்கில வழி கல்வி என்ற முறையை
தனியார் பள்ளிகள் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுகொண்டு இருந்தன. இதனால் தமிழக அரசு பள்ளிகளின், தமிழ் வழி கல்வி முறையை புறக்கணித்து, தமிழக மக்கள் ஆங்கில மோகம் கொண்டு தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனை பயன்படுத்திக்கொண்ட தனியார் பள்ளிகள், அதிகபட்ச கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வந்திருந்தது.
இதனை அடுத்து தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விமுறை சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் தமிழ் வழி கல்விமுறையில் நிறைய மாற்றங்களையும் கொண்டுவந்தது. இதற்க்கு நல்ல வரவேற்பு பெருகவே, அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி தொடங்க அனுமதி கோரி விண்ணப்பித்தது.
இதற்கிடையே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கெனவே அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று அதற்கான அரசாணையை தமிழக அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில், ''ஆங்கில வழி கல்விக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை விரிவுபடுத்தப்பட உள்ளதாக'' தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ''ஆங்கில வழி பிரிவுகளில் பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஆங்கில வழியில் பாடத்தை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் போதுமான அளவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆங்கில வழி கல்வி கோரும் பள்ளிகளில் 50 சதவீத பிரிவுகள் கட்டாயமாக தமிழ் வழி பிரிவுகளாக இருக்க வேண்டும்''. உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment