எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

'Smart' classrooms in 3,000 schools are handheld computers for 30 thousand students

Friday, July 27, 2018


3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30ஆயிரம் மாணவர்களுக்கு கையடக்க கணினி
அரசு பள்ளி மாணவர்கள், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' எனப்படும், கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், 3,000 பள்ளிகளில், டிஜிட்டல் பலகையுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வித்தரத்தை உயர்த்த, பல்வேறு திட்டங்களை, தமிழக பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்து வருகிறது.இதன்படி, 3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மூன்று மாதங்களில், டிஜிட்டல் பலகையுடன், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.பாடங்களை ஒளிபரப்ப, தலா ஒரு புரஜக்டர் வழங்கப்படும்.

மேலும், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு, 3,000, 'டேப்லட்'கள் வழங்கப்படும்.இதற்கான நடவடிக்கைகளை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் மேற்கொண்டுஉள்ளது. இவற்றுடன், ஒரு பள்ளிக்கு, 10 மாணவர் வீதம், மொத்தம், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' என்ற, கையடக்க கணினி இலவசமாக வழங்கப்பட உள்ளது.இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்னும், 90 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் இயங்க துவங்கும்; ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தில் பாடங்கள் நடத்தப்படும்.

சென்னை உட்பட, எந்த முக்கிய நகரங்களில் இருந்தும், கல்வியாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள், 'டேப்லட்' பயன்படுத்தி, 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், ஸ்மார்ட் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்த முடியும்.

இந்த ஸ்மார்ட் வகுப்பில், ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில், 'ரைம்ஸ்' என்ற, பள்ளி குழந்தைகளுக்கான பாடல்கள், ஒழுக்க நெறி கதைகள் போன்றவையும், வீடியோவாகவழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One