எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

11,12 வகுப்புகளில் இனி தோட்டக்கலை கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்

Friday, August 31, 2018





அடுத்த ஆண்டு முதல் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தோட்டக்கலை, ஆடை வடிவமைப்பு, சுற்றுலா உள்ளிட்ட பாடப்பிரிவுகள் சேர்க்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாடவ்டம் ரா.பட்டணம் அரசுப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ‘எந்தவிதமான பொதுத்தேர்வுகள் வந்தாலும் அதை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீட் தேர்வு பயிற்சிக்காக, ஆன்லைன் முறையில் 25 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நீட் தேர்வில், அரசுப் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேர் மருத்துவ படிப்புக்கு செல்வார்கள். அந்த வகையில் சிறப்பான பயிற்சிகள் அளிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது அரசு பள்ளி மாணவர்களுகு்கு புதிய வண்ண சீருடைகள் வழங்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையில் ஒரு சீருடையும், 6 முதல் 8ம் வகுப்பு வரையில் மற்றொரு சீருடையும் வழங்கப்பட உள்ளது.





மேலும், அடுத்த ஆண்டு முதல் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தோட்டக்கலை, ஆடை வடிவமைப்பு, சுற்றுலா உள்ளிட்ட பாடப்பிரிவுகள் சேர்க்கப்படும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதுவரையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக அந்தந்த பகுதிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.’
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One