எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

15 லட்சம் மாணவர்களுக்கு, 'லேப் டாப்' : ரூ.3,000 கோடியில், வழங்க தமிழக அரசு முடிவு

Monday, August 20, 2018


 தமிழக அரசின், இலவச, 'லேப்டாப்' இந்தாண்டு, 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, 'லேப்டாப்'பும், பிளஸ் 1 படிப்போருக்கு சைக்கிளும், இலவசமாக வழங்கப்படுகிறது.கடந்த, 2017 - 18ல், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை; 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்ற, சில மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மீதமுள்ள, ஐந்து லட்சம் பேருக்கு வழங்க வேண்டிஉள்ளது. அதேநேரத்தில், பள்ளி படிப்பிலேயே மாணவர்களுக்கு பயன் தரும் வகையில், இலவச லேப்டாப் வழங்கலாம் என, பள்ளி கல்வி அதிகாரிகள் முடிவு செய்தனர். எனவே, நடப்பு கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் போதே, லேப்டாப்பும் வழங்க, ஆலோசனை நடந்துள்ளது.இதன்படி, 2017 - 18ல், பிளஸ் 2 படித்தோர், நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 படிப்போருக்கு, இந்த ஆண்டிலேயே, லேப்டாப் வழங்கப்பட உள்ளது. பிளஸ் 1 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதால், அவர்கள், நீட், ஜே.இ.இ., போன்ற, நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக, உதவியாக இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால், நடப்பு கல்வி ஆண்டில், மூன்று தரப்பு மாணவர்களுக்கும், 3,000 கோடி ரூபாய் செலவில், லேப்டாப்கள், 500 கோடி ரூபாய் செலவில், சைக்கிள் கள் என, மொத்தம், 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One