எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு விடைத்தாள் நகல்: இன்று பதிவிறக்கம் செய்யலாம்

Thursday, August 30, 2018

தமிழகத்தில் கடந்த ஜூன்,  ஜூலை மாதங்களில் பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வெழுதி விடைத் தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவெண்,  பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து,  இரு நகல்கள் எடுத்து செப்.3-ஆம் தேதி முதல் செப்.4 வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.  மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
மறு மதிப்பீடு:  ஒரு தாள் கொண்ட பாடம்- ரூ.505,  இரு தாள் கொண்ட பாடம்- ரூ.1,010 (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்)
மறுகூட்டல்:  ஒரு தாள் கொண்ட பாடம்- ரூ.205,  இரு தாள் கொண்ட பாடம் ரூ.305 (மொழிப்பாடம்,  ஆங்கிலம் மற்றும் உயிரியல்).  இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One