எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: ஆக. 27 -இல் மறுமதிப்பீடு முடிவுகள்

Saturday, August 25, 2018

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில்
நடைபெற்ற பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வெழுதி
மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் வரும் 27 -ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் ஆகஸ்ட் 27 -ஆம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn. nic.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One