எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு: செப்., 28க்குள் படிவங்களை சமர்ப்பிக்கலாம்

Sunday, August 26, 2018

'ஓய்வூதியதாரர்களுக்கு, புதிய மருத்துவ காப்பீடு திட்டம், செப்., 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சியில், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, புதிய மருத்துவ காப்பீடு திட்டம் - 2018 செயல்படுத்தப்பட உள்ளது.இதற்காக, காப்பீட்டு திட்டத்திற்கான படிவத்தை பூர்த்தி செய்து, வரும், 29ம் தேதி முதல், செப்., 28ம் தேதி வரை, மாநகராட்சி பொன்விழா கட்டடத்தில் அளிக்கலாம்.




* பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் வாயிலாக, ஓய்வூதியம் பெறுவோர், 29, 30 ஆகிய தேதிகளில், படிவங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்

* இந்தியன் வங்கியில் ஓய்வூதியம் பெறும், 2000டிச., 31ம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆக., 31 செப்., 3, 4 ஆகிய நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்* கடந்த, 2001 ஜன., 1 முதல், 2010 டிச., 31 வரை, ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், செப்., 5 முதல், 6ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்

* கடந்த, 2011 ஜன., 1ம் தேதிக்கு பின் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், செப்., 10, 11ல் பூர்த்தி செய்து படிவங்களை அளிக்க வேண்டும்

* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாயிலாக, ஓய்வூதியம்பெறும், 2000 டிச., 31 வரை ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், செப்., 12, 14, 17 ஆகிய நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்* கடந்த, 2001 ஜன., 1 முதல், 2010 டிச., 31 வரை ஓய்வு பெற்ற, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், செப்., 18 முதல், 20ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்

* கடந்த, 2011 ஜன., 1ம் தேதிக்கு பின், ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், செப்., 24 முதல், 28ம் தேதி வரை படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்

* ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவரும், அசல் ஓய்வூதிய புத்தகம், ஆதார் அட்டை சமர்ப்பிக்க வேண்டும்

* மேலும், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது இரண்டு பாஸ்போர்ட் புகைப்படமும், ஓய்வூதியதாரர்கள் கணவன், மனைவி இருவரின் புகைப்படமும் சமர்ப்பிக்க வேண்டும்

* குடும்ப ஓய்வூதியதாரர், தங்களது வயது குறித்தஆவணத்தில், இரண்டு நகல்களையும், ஓய்வூதியதாரர் தங்களது கணவன், மனைவி வயது குறித்த ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும்.

மேலும், வயது முதிர்வால், நேரில் வர முடியாத ஓய்வூதியதாரர்கள், www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது தனி நபரை நேரில் அணுகியோ, படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, தகுந்த ஆவணங்களுடன், செப்., 25ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One