அஞ்சுகத்தாய் பெற்ற
அருந்தமிழ் நீ
திருக்குவளை அருளிய
திருக்குறள் நீ
செம்மொழி கண்ட
செழுந்தமிழ் நீ
கைம்பெண் எனப்போற்றிய
கதிரவன் நீ
மாற்றுத்திறனாளி என மதித்துரைத்த
மாண்புடையவன் நீ
திருநங்கை என திருத்திய
திருப்புகழ் நீ
ஆசிரியரைக் கொண்டாடிய
ஆசான் நீ
அரசு ஊழியர்களின்
ஆதவன் நீ
இரண்டு ரூபாயில் அரிசி தந்த
இறைவன் நீ
வரவேற்பறைக்கெல்லாம் வண்ணத்திரை தந்த
வள்ளல் நீ
சமத்துவபுரம் கண்ட
சமத்துவம் நீ
பெண்ணுக்குச் சொத்துரிமை கொடுத்த
பெருமை நீ
குடிசைமாற்று வாரியம் கண்ட
கோபுரம் நீ
இலவச மின்சாரம் தந்த
இதயம் நீ
சென்னை எனப்பெயர்கண்ட
செந்தமிழ் நீ
தமிழுலகம் கொண்டாடும்
தனித்தமிழ் நீ
திரையுலகம் கண்டிட்ட
திரவியம் நீ
எதிரிகளுக்கெல்லாம்
ஏறு போன்றவன் நீ
பேரறிஞர் அண்ணாவின்
பெருமைக்குரிய தம்பி நீ
கோடித் தொண்டர்களின்
கொண்டாடும் அண்ணன் நீ
ஐந்துமுறை முதல்வரான
ஐம்பெருங்காப்பியம் நீ
அரசியல் தோல்வி காண
அரிச்சுவடி நீ
நீ இல்லாத் தமிழ்நாடு
தலைவனில்லாத் தனிநாடு...
தமிழிருக்கும் நாள்வரை
தலைவா! உன் பெயரிருக்கும்..
சென்று வா தலைவா!!!!
சிகரம் சதிஷ்குமார்

No comments:
Post a Comment