72-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நல் ஆளுமை விருதுகளை தமிழக முதல்வர் பழனிசாமி புதன்கிழமை வழங்கினார்.
விருது பெற்றவர்களின் விவரங்கள்
1. டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது, 2018
தக்ஷா குழு, வான்வெளி ஆராய்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை. இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஆசிரிய உறுப்பினர்கள்/ ஆலோசகர்கள்
1. முனைவர் எஸ்.தாமரைச்செல்வி, இயக்குநர்,
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.
2. முனைவர் கே.செந்தில்குமார், இயக்குநர்,
வான்வெளி ஆராய்ச்சி மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.
3. ஸ்ரீ சி.யு. ஹரி, முதுநிலை திட்ட ஆலோசகர்,
வான்வெளி ஆராய்ச்சி மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.
4. முனைவர்.ஏ.மொகமது ரஷீத், திட்ட அறிவியலாளர்,
வான்வெளி ஆராய்ச்சி மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.
2. துணிவு மற்றும் சாகச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது
சிறுத்தை புலியை விறகு கட்டையால் தனி ஆளாக விரட்ட மகளை காப்பாற்றிய செயலுக்காக கோவை வால்பாறையில் உள்ள பெரியகல்லார் கிராமத்தின் ஐ. முத்துமாரிக்கு வழங்கப்படுகிறது.
3. முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள்
(i) பதிவுத் துறை - ‘Project-Star 2.0’ என்ற இணைய மென்பொருள் மூலம் பொதுமக்களுக்கு துரிதமான பதிவு மற்றும் இணைய சேவைகளை வழங்குதல்
(ii) உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை - தமிழ்நாட்டில் பொது விநியோக முறையினை ‘End-to-end’ முறையில் கணினிமயப்படுத்துதல் (வகை-அமைப்பு)
iii) மாநில நலவாழ்வு சங்கம் - TAIE - தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால விழிப்புணர்வு முயற்சி
(iv) பண்டி கங்காதர், இ.கா.ப, காவல் கண்காணிப்பாளர், தருமபுரி மாவட்டம் - பண்பு, மனநிலை முதலியவற்றை மேம்படுத்துவதன் மூலமும், இணக்கமான பணியிட சூழ்நிலையினை உருவாக்குவதன் மூலமும் காவல் நிலையம் பற்றிய பொதுவான கருத்தை மாற்றியமைப்பதே
(v) (அ) காவேரி தொழில் நுட்பக் குழுமம்
(ஆ) திரு. ஆர். சுப்ரமணியன், தலைவர், காவேரி தொழில் நுட்பக் குழுமம்.
உச்ச நீதிமன்றத்தில் மாநிலங்களுக்கிடையேயான நிதிநீர் பிரச்சினைகளில் இருந்த சட்டப்பூர்வமாக வழக்குகளில் ஆலோசனை செய்தல், தொடார்புடைய ஆவணங்களை சேகரித்தல் உள்ளிட்டவற்றில் பங்களித்ததற்கு
4. மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ் நாடு அரசு விருதுகள்
(i) சிறந்த மருத்துவர் - டாக்டர். பா.செந்தில்குமார், எம்.எஸ். (ஆர்த்தோ), திருப்பூர்
பா.செந்தில்குமார் 15 ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவை புரிந்து வருகிறார்.
(ii) சிறந்த சமூகப் பணியாளர் - முனைவர். லதா இராஜேந்திரன், தாளாளர் / முதல்வர், டாக்டர் எம்.ஜி.ஆர். பேச்சு மற்றும் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர்.தோட்டம்
லதா இராஜேந்திரன், டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியின் தாளாளராகவும், முதல்வராகவும் பணியாற்றி வருகிறார். காது கேளாத குழந்தைகளுக்கு கறபித்தலுக்கான சிறப்பு கல்வித்தகுதி பெற்றுள்ள இவர் காதுகேளாத மற்றும் பேச இயலாத குழந்தைகளின் மேம்பாட்டிற்காக கடந்த 28 ஆண்டுகளாக சீரிய முறையில் பணியாற்றி வருகிறார்.
(iii) சிறந்த தொண்டு நிறுவனம் - அறிவாலயம்
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையம், கைலாசபுரம், திருச்சி
அறிவாலயம் எனும் தொண்டு நிறுவனம் 1977ம் ஆண்டு ஏழு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் துவங்கப்பட்டு தற்போது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி மற்றும் மறுவாழ்வு மையம் என வளர்ச்சி பெற்று தற்போது 180 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி குறையுடையோர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
(iv) மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த “சிறந்த தனியார் நிறுவனம்” - டெட்டி எக்ஸ்போர்ட்ஸ், தென்காசி ரோடு, திருமங்கலம், மதுரை
டெட்டி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 312 பணியாளர்களை பணியமர்த்தி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி செயல்பட்டு வருகிறது.
(v) மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக செயல்படும் “சிறந்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி” - சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிமிடெட்
சேலம், மத்தியக் கூட்டுறவு வங்கி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலுள்ள கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வாழந்து வரும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடும் வகையில் பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது.
5. மகளிர் நலனுக்காகச் சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான விருது
(i) சிறந்த தொண்டு நிறுவனம் (மகளிர் நலனுக்காகச் சிறப்பாகத் தொண்டாற்றியதற்காக) சிறந்த சமூக சேவகர்
எம்.சிவக்குமார் - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம், கோவை
சிறந்த முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பணியாற்றி வரும் நிறுவனத்தின் தலைவர், கோவை.
(ii) சிறந்த சமூகப் பணியாளர் (மகளிர் நலனுக்காக சிறப்பாகத் தொண்டாற்றியது) சிறந்த தொண்டு நிறுவனம்
RIVER – THE POWER OF WOMAN - கீழ்பாக்கம், சென்னை
6. சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள்:
சிறந்த மாநகராட்சி - திருப்பூர், பரிசுத் தொகை : ரூ.25 லட்சம்
சிறந்த நகராட்சிகள்:
முதல் பரிசு - கோவில்பட்டி - ரூ.15 லட்சம்
இரண்டாம் பரிசு - கம்பம் - ரூ.10 லட்சம்
மூன்றாம் பரிசு - சீர்காழி - ரூ.5 லட்சம்
சிறந்த பேரூராட்சிகள்:
முதல் பரிசு - ஜலகண்டாபுரம், சேலம் - ரூ.10 லட்சம்
இரண்டாம் பரிசு - பழனிசெட்டிபட்டி, தேனி - ரூ.5 லட்சம்
மூன்றாம் பரிசு - பாலகோடு, தருமபுரி - ரூ.3 லட்சம்
7. முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள்:
இவ்விருது ரூ.50,000/- ரொக்கப்பணம், பாராட்டுச் சான்று மற்றும் பதக்கம் கொண்டதாகும்.
ஆண்கள் பிரிவு:
1. சி. பாஸ்கரன், தேனி
இவர், தனது கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச தனிப்போதனை (Tuition) வகுப்புகளை நடத்தி, இளைஞர் மன்றம் மூலம் பல்வேறு சமூக செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.
2. அ. மகேஷ், கடலூர்
இவருக்கு இவ்விருதானது, வயது முதிர்ந்த, ஆதரவற்ற மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு ஆற்றிய சீரிய தன்னார்வ சேவைக்காக வழங்கப்படுகிறது.
பெண்கள் பிரிவு:
சு. அஷ்வீதா, திருநெல்வேலி
இவருக்கு இவ்விருதானது, இவர் உருவாக்கிய a Bodhi Tree Skills Foundation மூலமாக கிராமப்புற பட்டதாரிகளின் மேம்பாட்டிற்கு திறன் பயிற்சி வழங்கும் இவருடைய சீரிய முயற்சிக்காக வழங்கப்படுகிறது
No comments:
Post a Comment