சேலம் மாநகரில் ரூ.5.07 கோடியில்
அமைக்கப்பட்டுள்ள 12 பசுமைவெளி பூங்காக்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அம்மாப்பேட்டை அய்யாசாமி பூங்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பூங்காக்களை முதல்வர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி உரை நிகழ்த்தி வருகிறார். அப்போது கல்வித் தரம் உயர்த்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதனிடையே சேலம் மாநகராட்சியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், பல்வேறு துறைகளில் முன்னோடி மாவட்டமாக சேலம் திகழ்கிறது என்றும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.1.8 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment