தகுதி இல்லாத பள்ளிகளில், பொதுத்தேர்வுக்கான மையம் அமைக்க
பரிந்துரைத்தால்,
மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான, முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன*
.முதற்கட்டமாக, மாணவர்களின் எண்ணிக்கை விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
.அதேபோல, மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், புதிய தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து, கருத்துரு அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கடிதம் அனுப்பியுள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது.
.இதுவரை தேர்வு மையம் அமைக்காத பள்ளியில், தேர்வு மையம் அமைப்பது கட்டாயம் என, தெரிந்தால், அதை துறை ரகசியம் காத்து, இயக்குனரகத்துக்கு பரிந்துரைக்க வேண்டும்.
பரிந்துரையின் போது, சரியான காரணங்கள் மற்றும் அதற்கான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
மேலும், அந்த பள்ளியில் தேர்வு மையம் அமைப்பதற்கான தகுதிகள், உள் கட்டமைப்பு உள்ளதா என, அரசாணையின்படி ஆய்வு செய்ய வேண்டும். மாறாக, தகுதி இல்லாத பள்ளிகளை தேர்வு மையம் அமைக்க பரிந்துரைத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது, துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment