எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நீதிநெறி விளக்கப்பாடலை வார்த்தை மாறாமல்,வரிசை மாறாமல் விளையாட்டு முறையில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியை

Sunday, August 12, 2018


வார்த்தை மாறாமல் வரிசை மாறாமல் விளையாடலாம் வாங்க........
வரிசைப்படுத்தி விளையாடலாம் .... வாங்க ..
நீதி நெறி விளக்கம்  இளமை , செல்வம் ,யாக்கை, நிலையாமை, கல்வியின் சிறப்பு ,செய்யக்கூடாத து இவற்றை அழகாக விளக்கும் பாடல் .இப்பாடலை இயற்றியவர் குமரகுருபரர்  அவர்கள் .... குமரகுருபரர் அவர்கள்  17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர் ஆவார்.......
பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் அமைந்தது...........இவர்
எழுதிய நூல்கள்

கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
கயிலைக் கலம்பகம்
காசித் துண்டி விநாயகர் பதிகம் போன்றவை ஆகும் .
பாரதிதாசன் அவர்கள் குமரகுருபரர் மீது கொண்ட பற்றினால் தமது எதிர்பாராத முத்தம் என்ற நூலில் அவரைப் பற்றி குறிப்பிடுகிறார்......அவரது நீதி நெறி விளக்கப்பாடலில் இரு பாடல்கள் ஐந்தாம் வகுப்பு  குழந்தைகளில்  யார் முதலில் பாடலை வரி மாறாமல் , வார்த்தை மாறாமல்   வைக்கிறார்களோ அவர்களே வெற்றிப்பெற்றவர்கள் .... ஆர்வத்துடன்அனைவரும் பங்குப்பெற்றனர் .....














ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிப்புதூர் ,
ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் ....

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One