எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பென்சில் துண்டில் ஒரு சாதனை முயற்சி ! என்ன அது ?

Monday, August 27, 2018


மிக நுண்ணிய 0.05 எம். எம் பென்சிலில் A முதல் Z வரை செதுக்கி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள பொறியியல் பட்டதாரி பெண் அசத்தியுள்ளது.

சென்னை அடுத்த மேடவாக்கத்தை சேர்ந்தவர் விஜயபாரதி இவர் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி வந்த விஜயபாரதி பென்சிலில் மிக சிறிய அளவிலான சிலைகளை செதுக்குவதை சமூக வலைதளங்களில் பார்த்து அதில் ஆர்வம் ஏற்பட்டு தானும் பென்சிலில் மிகச்சிறிய அளவிலான சிலைகளை செதுக்க வேண்டும் என எண்ணி கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சி பெற்றுவருகிறார்.




உலக சாதனை படைக்க வேண்டுமென்று மிக மிக சிறிய பென்சிலில் அதாவது 0.05 எம். எம் அளவிலான பென்சிலில் வெறும் கண்களால் A முதல் Z வரை செதுக்கி உலக சாதனை முயற்சியை சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செய்தார். காலை 10.40 மணிக்கு துவங்கிய இந்த உலக சாதனை முயற்சி 12.40 மணிக்கு முடிவடைந்தது. 2 மணி நேரத்தில் மிக மிக சிறிய அளவிலான சாதனையை வீடியோ பதிவாக பதிவு செய்து அனுப்பி வைக்கபடும் எனவும் அதன்பிறகு உலக சாதனையை ஏற்றுக் கொண்டால் அங்கீகரிக்கப்படும் என்றார்.



இதுவரை இதை யாரும் முயற்சி செய்யவில்லை என்றும் நான் தான் முதலில் இந்த முயற்சியை எடுத்து இருப்பதாகவும் நிச்சயம் உலக சாதனை படைப்பேன் என்கிறார். இதுவரை கடவுள் சிலைகள், வீடு, இதயம், தொடர் சங்கிலி, என பல்வேறு சிறிய அளவிலான உருவங்களை பென்சிலில் செதுக்கி உள்ளார். இவர் முயற்சி செய்த சாதனையை வெறும் கண்களால் பார்க்க கூட முடியாது. ஆனால் இவர் வெறும் கண்காளால் வரைந்திருப்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One