எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பாடப் புத்தகம் வெளியாகுமுன் வழிகாட்டி புத்தகம் வெளியிட்ட இரு பதிப்பகங்கள் மீது வழக்கு

Wednesday, August 15, 2018

பிளஸ் 1 பாடப் புத்தகம் வெளியாவதற்கு முன்பே வழிகாட்டிப் புத்தகம் வெளியிட்ட, சென்னையைச் சேர்ந்த இரு தனியார் பதிப்பகங்கள் மீது அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தமிழக அரசு, இந்தக் கல்வியாண்டு 1, 6, 9, 11-ஆம் வகுப்புக்கான புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த வகுப்புகளின் பாடப் புத்தகம் வெளியாவதற்கு முன்பே, சில தனியார் பதிப்பகங்கள் புதிய பாடத் திட்டத்துக்கான வழிகாட்டிப் புத்தகத்தை வெளியிட்டன. இதில் 11-ஆம் வகுப்பு பாட நூல்களுக்கு வழிகாட்டிப் புத்தகங்களை சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஒரு தனியார் பதிப்பகம் உள்ளிட்ட இரு பதிப்பகங்கள் வெளியிட்டிருந்தன.
இது தொடர்பாக, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் விசாரணை செய்தனர். பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (பாடப்பிரிவு) பொன் குமார், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவில் புகார் செய்தார்.




பாடப் புத்தகம் வெளியாகுமுன்: விசாரணையில் கிடைத்த தகவல்கள் விவரம்:
பள்ளிக் கல்வித் துறை பிளஸ் 1 வகுப்பின் புதிய பாடப் புத்தகத்தை, சென்னையைச் சேர்ந்த இரு தனியார் பதிப்பகங்களிடம் அச்சிடுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியை வழங்கியது. பாடப் புத்தங்களின் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்ட இரு தனியார் பதிப்பகங்களும், பாடப் புத்தகம் வெளியாகு முன்பே, அதன் மூலம் வழிகாட்டி புத்தகத்தை தயாரித்துள்ளனர்.
பாடப் புத்தகம் மாணவர்களிடம் வழங்குவதற்கு முன்பே, அந்த இரு பதிப்பகங்களும் தங்களது நிறுவனம் சார்பில் அனைத்து பாடங்களுக்கும் வழிகாட்டிப் புத்தகத்தை வெளியிட்டு, பணத்தை ஈட்டியிருக்கின்றனர் என்பது தெரியவந்தது.
இரு நிறுவனங்கள் மீது வழக்கு: இதையடுத்து, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸார், இரு பதிப்பகங்கள் மீதும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
வேறு சில பதிப்பகங்களும், பாடப் புத்தகம் வெளியாவதற்கு முன்பே வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டிருப்பதாக அறிவுசார் சொத்துரிமை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையிலும் போலீஸார் விசாரணை செய்தனர். இதில் அந்த பதிப்பகங்களின் மீதான குற்றச்சாட்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக அந்த பதிப்பகங்களின் மீதும் வழக்குப் பதிவதற்குரிய நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One