எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

குழந்தைகளிடம் மரங்களை நேசிக்க கற்றுக் கொடுத்தால் மனிதர்களை நேசிக்க கற்றுக் கொள்வார்கள் - வட்டார கல்வி அலுவலர் பேச்சு..

Thursday, August 16, 2018


அன்னவாசல்,ஆக.15: குழந்தைகளிடம் மரங்களை நேசிக்க கற்றுக் கொடுத்தால் அவர்கள் மனிதர்களை நேசிக்க கற்றுக் கொள்வார்கள் என அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் துரைஅரசன் பேசினார்.
 புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி அரசுப் பள்ளியில்  சுதந்திர தினவிழாவையொட்டி புதன்கிழமை ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்  விழா நடைபெற்றது..
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெ.சாந்தி தலைமை வகித்தார்..கிராம கல்விக் குழுத்தலைவர் கருப்பையா முன்னிலை வகித்தார்...





விழாவில் ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் திட்டத்தினை தொடங்கி வைத்து அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் துரை அரசன் பேசியதாவது:  இயற்கையை பாதுகாக்கும் முதற்காரணியான மரங்களே இல்லாமல் இன்றிருக்கும் நிலையே தொடர்ந்து நீடித்தால்  இன்னும் பத்து ஆண்டுகளில் பாலைவனம் ஆகும் என்ற ஆய்வின் கூற்று நம்மை எச்சரிக்கை செய்கிறது..


மேலும் புவி வெப்பமடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டான்.இதை தவிர்க்கத் தான் நாம் மரங்களை வளர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்... மரங்களை நட்டோம் என்று சொல்வதற்கு பதில் தண்ணீர் ஊற்றி அத்தனை மரங்களையும் உயிருடன் வளர்த்திருக்கிறோம் என்ற சாதனையை மாணவர்கள் செய்ய வேண்டும்.. வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற நிலை மாறி ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டோம்...







மரக்கன்றுகளை பள்ளி வளாகத்திலும் வீட்டிலும் நடச் செய்வதன் மூலம் இயற்கையிலேயே சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை மாணவ- மாணவிகளிடம் ஏற்படுத்தலாம்..மேலும் நாட்டிற்கு நல்ல
குடிமக் களை உருவாக்குகின்ற உன்னத பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களாகிய நீங்கள் குழந்தைகளிடம் மரங்களை நேசிக்க கற்றுக் கொடுத்தால் அவர்கள் மனிதர்களை நேசிக்க கற்றுக் கொள்வார்கள்.மேலும் குழந்தைகளாகிய நீங்களும் மதம்,சாதி மீது பற்று கொள்ளாமல் நாட்டின் மீது பற்று கொள்ள சுதந்திர நாளில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்  என்றார்..
விதைப் பென்சில்கள் வழங்கி வட்டார வளமையமேற்பார்வையாளர் கோவிந்தராசு பேசியதாவது:
இந்த பென்சிலானது மரத்தைப் பயன்படுத்தாமல் கழிவுத்தாள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது..பென்சிலின் மேல் முனையில் கத்தரி,தக்காளி,வெண்டை,கீரை விதைகள் பொதிந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவர்களாகிய நீங்கள் இந்த விதைப் பென்சில் தீர்ந்தவுடன் அவற்றை கண்ட இடங்களில் தூக்கி எறியாமல் பள்ளிகளின் வெளிப்புறத்திலும் வீடுகளிலும் தோட்டத்திலும் போட்டு செடியை   ஆர்வமுடன் வளர்க்க வேண்டும்..பாதியில் பென்சிலை தூக்கி போட்டாலும் அது மறுசுழற்சி செய்யப்பட்டு ள்ளதால் மண்ணோடு மண்ணாக மட்கி செடியாக முளைத்து விடும்.இதன் மூலம்  இயற்கையை பசுமையை சுற்றுச்சூழலை  பாதுகாக்கலாம் என்றார்..
பள்ளித்தலைமையாசிரியர் சாந்தி கூறியதாவது:
மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த விதைப் பென்சில் வழங்கும் திட்டத்தை திருச்சியை சேர்ந்த நல்லாசிரியை லதாபாலாஜி அவர்களது ஆலோசனையின் பேரில் தொடங்கியுள்ளோம்..இதன் மூலம் ஒவ்வொரு மாணவர் மனதிலும் மரங்களை வெட்டக் கூடாது,மரம் செடிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம் என்றார்..
முன்னதாக நடைபெற்ற பேச்சுப்போட்டி,பாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விலையில்லா புத்தகப் பையும் வழங்கப்பட்டது.. வழங்கப்பட்டது..பின்னர் நாட்டுப்பற்று ,பண்பாடு,கலாச்சாரம் ஆகியவற்றை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சுகள் நடத்தப்பட்டது...
விழாவில் கிராமக்
 கல்விக் குழு உறுப்பினர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்,ஊர்ப்பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...விழாவில்   ருத்ரா என்ற மூன்றாம் வகுப்பு மாணவி பாரதியார் ஆட் வேடமிட்டும்,வினித் என்ற ஐந்தாம் வகுப்பு மாணவன் பாரத மாதா வேடமிட்டும் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் முனியசாமி செய்திருந்தார்..

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One